நேர்மையாக மக்களுக்கு சேவையாற்றிய எந்தவொரு அரச அதிகாரியும் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பு பாதுகாப்பை பெற்றுத்தருவோம் – மஹிந்த

நேர்மையுடன் மக்களுக்கு சேவையாற்றிய எந்தவொரு அரச அதிகாரியும் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பு பாதுகாப்பை பெற்றுத்தருவதற்கு எதிர்பார்ப்பதாக  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

கிராமத்துடன் கலந்துரையாடலின் மூலம் வேலைத்திட்டத்துடன் கிராமத்திற்கு தேசிய வேலைத்திட்டத்தின் அரச அதிகாரிகளுக்கு தௌவூட்டும் நிகழ்வு ( 07) அலரி மாளிகையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு பிரதமர் நிகழ்த்திய முழுமையான உரை வருமாறு,

2021 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாம் பாரிய தொகையை உள்நாட்டு தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்த வரவு செலவுத்திட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என்று எமது விமர்சகர்கள் எம்மீது குற்றும் சுமத்தினர். எனினும் நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காரணமின்றி நிதியை ஒதுக்கும் திட்டங்களை ஆரம்பித்ததில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேர்தலை எதிர்பார்த்து எவ்விடயமும் இவ்வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. நாம் மக்களுக்கு அவ்வாறான மோசடிகளை செய்யமாட்டோம் என்பதை நாம் ஏற்கனவே கூறியிருக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் அவ்வாறு செய்யப்போவதில்லை. இந்த வரவு செலவுத் திட்டம் கிராம விவசாயிகள், மீனவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை மேம்படுத்துவதற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவை செயற்படுத்துவதற்கு எமக்கு சர்வதேச நிபுணர்கள் அவசியமில்லை. அதனால் இவ்வரவு செலவுத் தி;ட்டத்தை எமது அரச அதிகாரிகளே செயற்படுத்தவுள்ளனர். இதனை நீங்களே கொண்டு செல்லவுள்ளீர்கள்.

இது கடினமானதொன்று என்பது எமக்கு தெரியும். எனினும், அந்த கடினமான பணியை நீங்களே நிறைவேற்ற வேண்டும். இதுவரை செய்ததும் நீங்களே. அதுவும் எமது நாட்டின் கிராம மக்களுடன் ஒன்றிணைந்து. அம்மக்கள் தொழில் முனைவோருக்கான அறிவை பெற்ற, பெரும் பயிற்சி பெற்ற, நிறுவனங்களில் பணியாற்றி தேர்ச்சி பெற்றவர்கள் அல்ல. அவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய நேரிடும். அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியை குறைத்துக் கொள்ள வேண்டும். அரச அதிகாரிகளான நீங்கள் அரசாங்கத்தின் கருத்தை புரிந்துக் கொள்ள வேண்டும்.

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்லும்போது மக்களின் தேவை எமக்கு புலப்படும். புத்தகத்தில் உள்ளவற்றிற்கும், நிர்வாக விதிமுறைகள், நிதி விதிமுறைகளில் உள்ளவற்றிற்கும், மக்கள் கோருகின்றவைக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது. அவற்றை மக்களின் தேவைக்கு ஏற்றவகையில் கையாண்டு பணியாற்றும் சவாலே உங்களுக்கு உள்ளது. தற்போதுள்ள பல சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் வழக்கற்று போயுள்ளன.

குறிப்பிட்ட வரையறைக்கு அப்பால், சட்டத்திற்கு அப்பால் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் நாம் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என பலர் எண்ணுகின்றனர். ஏனெனில், இந்நாட்டின் அரச அதிகாரிகள் மக்களுக்காக சேவையாற்றியமையால் அவர்களை சிறையில் அடைத்தமை நல்லாட்சி அரசாங்கம் இந்நாட்டிற்கு செய்த பாரிய துரோகமாகும். ஒரு இயற்கை அனர்த்தத்தின் போது வெள்ள நிவாரணம் வழங்கியதற்காக முன்னாள் இராணுவ தளபதியை எப்.சி.ஐ.டி.-க்கு அழைத்து விசாரணை நடத்தியிருந்தமை எனக்கு ஞாபகம் இருக்கின்றது. சில் உடைகள் வழங்கியமைக்காக ஜனாதிபதி செயலாளர், தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்ழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோர் சிறை வைக்கப்பட்டமை நீங்கள் அறிவீர்கள். நாம் இந்நிலையை நன்கு உணர்ந்துள்ளோம். எனவே இதற்கு நாம் தீர்வொன்றை வழங்குகின்றோம். நேர்மையுடன் சேவையாற்றிய எந்தவொரு அதிகாரிக்கும் தண்டனை வழங்க முடியாது. எனவே அதற்கு தேவையான அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பை வழங்குவதற்கு நாம் எதிர்பார்கின்றோம். சில் உடை வழக்கிலிருந்து விடுதலையான லலித் வீரதுங்க, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஆகியோர் மக்களுக்கு என்ன கூறினர்? நேர்மையுடன் மக்களுக்கு சேவையாற்றும் எந்தவொரு தருணமும் எதிர்மறை விளைவை ஏற்படுத்தாது என்பதாகும். எனவே, காணப்படும் சட்ட திட்டங்களுக்கு மேலாக இந்த நிதி மக்களின் நலனுக்காக உபயோகிக்கும் முறை குறித்து அனுபவம் வாய்ந்த நீங்கள் அறிவீர்களாகும்.

அமைச்சுக்களின் அமைச்சர்கள் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே சிறந்த தொடர்பு பேணப்பட வேண்டும். இராஜாங்க அமைச்சர்களாக சேவையாற்றுவதற்கு நாம் பல இளைய உறுப்பினர்களுக்கு வாய்ப்பளித்துள்ளோம். எமது அமைச்சர்கள் சேவையாற்றும் போது அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் சிறந்த தொடர்பை பேண வேண்டும் என்பதனை அவர்கள் அறிவார்கள். அவர்கள் மக்களிடமிருந்து மட்டுமின்றி அமைச்சின் அதிகாரிகளிடமிருந்தும் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

1970களில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் என்னை மாவட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழு பிரதிநிதியாக நியமித்தார். அதன்போது ஹம்பாந்தோட்டை அரசாங்க அதிபரை அழைத்து மஹிந்தவை அனுப்புகின்றேன். அவரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதாவது மிகவும் இளைய உறுப்பினராக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் சென்று அதிகாரிகளிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்பதையே அவர்கள் அச்சந்தர்ப்பத்தில் எனக்கு கூறினார். இந்த இளைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு நான் அந்த விடயத்தையே கூற விரும்புகின்றேன்.

அதேபோன்று நாம் நாட்டை ஆளும் போது அரச அதிகாரிகளுக்கும் மட்டுமின்றி, நிபுணத்துவ அறிவு கொண்ட, செயற்திறன் மிகுந்த, பல இளைஞர் குழுக்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

கொரோனா தொற்று என்பது அவ்வாறு அரச சேவையை பரிசோதித்து பார்த்த சந்தர்ப்பமாகவே கூற வேண்டும். கொரோனா தொற்று முகங்கொடுத்த போது உச்ச அளவில் நவீன தொழில்நுட்பத்தை உபயோகித்து பணியாற்றுவதற்கு வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. அத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற வேண்டியும் ஏற்பட்டது. கல்வியே எமக்கு பாரிய சவாலாக அமைந்தது. ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறு பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டமையை நீங்கள் அறிவீர்கள். அந்த சவாலை எமது ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர். தனியார் துறையினர் போன்றே அரச சேவையாளர்களும் ஒன்லைன் முறையின் கீழ் சிறப்பாக பணியாற்றினர்.

அதிலிருந்து அரச அதிகாரிகள் எந்தவொரு புதுமையான விடயத்தையும் உள்வாங்கி நெகிழ்ச்சித் தனை;மையுடன் பணியாற்ற கூடியர்கள் என்பது புலப்படுகிறது. இதிலிருந்து நவீன தொழில்நுட்பம் அரச நிறுவனங்களுக்குள் மிக வேகமாக உள்வாங்கப்பட வேண்டும் என்ற படிப்பினை உணர்த்தப்பட்டுள்ளது. அது அமைச்சுக்களின் செயலாளர்களாகிய உங்களது கடமையாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்கள் மத்திக்கு செல்வதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டும். எமக்கு செயற்திறன் மிக்க நாடொன்றே அவசியமாகும்.ஜனாதிபதியினால் உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 20 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அது தேங்கிக்கிடக்கும் பாரியளவிலான வழக்குகளை விரைவில் நிறைவு செய்வதற்கும், நாட்டிற்கு நீதியை நிலைநாட்டுவதற்கும் ஆகும். அந்த நீதியை அனைத்து அரச நிறுவனங்களின் ஊடாகவும் நிறைவேற்ற வேண்டும் என்பதை நான் ஞாபகப்படுத்துகின்றேன்.

நாம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினோம். நாம் யுத்தத்தை நிறைவுசெய்தோம். பின்னோக்கி சென்றிருந்த பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டோம். அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அசர சேவை எமக்கு உதவியளித்தது. எதிர்காலத்திலும் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொருளாதா புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி செயலாளர், பிரதமர் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.