திருக்கோவில் பிரதேச சாகாமம் குளத்தில் நீராடுவதற்கு பொது மக்களுக்கு தடை

திருக்கோவில் பிரதேச சாகாமம் குளத்தில் வான்பாயும் வெள்ளநீரில் நீராடுவதற்கு பொது மக்களுக்கு தடை
சட்டத்தை மீறிச் செல்வோருக்கு பீசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து குளத்தின்நீர் வான் பாய்ந்து வருகின்றது. இதனை பார்ப்பதற்காக பெருமளவான மக்கள் இங்கு ஒன்றுகூடிய நிலையில் அங்கு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச கொவிட் 19 தடுப்பு செயலணி குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த காலத்தில் போதிய மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறாத நிலையில் றூபஸ் குளம் கஞ்சிகுடிச்சாறு குளம் மற்றம் சாகாமம் ஆகிய குளங்களில் குறைந்தளவே நீர் மட்டம் காணப்பட்டு இருந்தன.
இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்ந்த கனமழை வீழ்ச்சி காரணமாக திருக்கோவில் பிரதேசத்தில் அனைத்து குளங்களின் நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில் சாகாம குளத்தில் நீர் நிறைந்து குளத்தின் நீர் வான் பாய்ந்து வருகின்றன.
சாகாமம் குளத்தின் நீர் வான் பாயும் அழகு மிகவும் ரம்மியமாக காட்சியளிப்பதுடன் நீர் வான் பாயும் அழகை பிரதேசத்தில் உள்ள மக்கள் கடந்த மூன்று நாட்களாக பார்வையிட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கொவிட் 19 அச்சம் காரணமாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் மசூத் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளதுடன் சாகாம குளத்தை அண்டிய பிரதேசத்தில் நீராட செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்
இதனை மீறி செல்வோருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தெரிவித்து இருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.