ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 10 நாட்கள் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதார அதிகாரிகளின் அறிவுரையினைப் பின்பற்றி தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை கொரேனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.