புங்குடுதீவில் 60 மின்விளக்குகள் பொருத்தப்பட்டது

புங்குடுதீவில் 60 வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இருள் சூழ்ந்து காணப்பட்டிருந்த வீதிகளில் வேலணை மின்சார சபையினரால் 60 மின் விளக்குகள் பொருத்தப்பட்டன .

அத்துடன் ஏற்கனவே கடந்தகாலங்களில் பொருத்தப்பட்டு பழுதடைந்து காணப்பட்டிருந்த முப்பது மின்விளக்குகளும் திருத்தியமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .