இவர்களுள் 492 பேர் பேலியகொட கொத்தணியுடன் சம்பந்தப்பட்டவர்களாவர். இதற்கமைய மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 459 தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 684 ஆகும். மேலும் 7 ஆயிரத்து 972 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை மொத்தம் 57 ஆயிரத்து 936 தொற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர். கொவிட் மரண எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (24) மூவரின் மரணம் உறுதி செய்யப்பட்டதையடுத்து மரண எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை