வட மாகாணத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 பேருக்கான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தேவை என கோரப்பட்டுள்ளது.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.

அவ்வாறு வடமாகாணத்தில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய சுகாதாரத் துறையினரின் விவரங்களை சுகாதார அமைச்சு கேட்டிருந்தது.

அதனடிப்படையில் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள், ஊழியர்கள் என 9 ஆயிரத்து 400 பேர் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்றனர்.

அவர்களுடம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ கல்வியாளர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் என ஆயிரம் பேருக்கும் சேர்த்து 10 ஆயிரத்து 400 பேரின் விவரம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.