யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் நால்வருக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் போதனா வைத்தியசாலையில் வைத்து தமக்கான கொரோனா தடுப்பூசி மருந்தை ஏற்றிக்கொண்டனர். வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்து 820 மருத்துவ சேவையாளர்கள், சுகாதாரத் துறையினருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த .சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் இன்று காலை 9 மணியிலிருந்து வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரியிலும் குறித்த செயற்பாடுஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது வரை 400 சுகாதார சேவையாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

அதேபோல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள சுகாதார சேவையாளர்கள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுகாதார சேவையாளர்கள் உட்பட 3,000 பேருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட்ட உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.