மீண்டும் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக திருமதி.ஸோபா ஜெயரஞ்சித்
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை சேர்ந்த திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் மீண்டும் இன்று(01) திங்கட்கிழமை பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக கடமையில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 08.01.2021 அன்று கிழக்கு மாகாண ஆளுனரால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியின் அடிப்படையில் கோறளைப்பற்று பிரதேச சபை உட்பட 14 உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு தங்களது பணிகளை செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 27.01.2021 அன்று வெளியிடப்பட்ட வரத்தமானியின் அடிப்படையில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தனது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மீண்டும் தவிசாளராக திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் மத அனுஸ்டானங்களுடன் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பௌத்த, இந்து , இஸ்லாமிய மதப் பெரியார்களின் ஆசிர்வாதங்களுடன்; தனது கடமையினை தவிசாளர் ஆரம்பித் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் கல்குடா தொகுதி இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான், பிரதேச சபையின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக ஒருவரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை