நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டவர்கள் தான் அரச உத்தியோகத்தர்கள்-உதவி பிரதேச செயலாளர் ரமீஸா

(ந.குகதர்சன்)

பொதுமக்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை அறிந்து அவர்களுக்கு சேவை செய்வதுடன், நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டவர்கள் தான் அரச உத்தியோகத்தர்கள் என கோறளைப்பற்று மத்தி உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீஸா தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவின் பிறைந்துறைச்சேனை 206ஏ கிராம சேவகர் பிரிவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் கௌரவிப்பு நிகழ்வும் பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –

அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கு சேவையாற்றுவதற்கு பிரதேச சமூக மட்ட அமைப்புக்கள், கிராம மட்ட அமைப்புக்கள் என்பன உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போது தான் அரச உத்தியோகத்தர்கள் சேவையை வழங்குவதற்கு இலகுவாகவும், பிரதேச அபிவிருத்தியில் முன்னோக்கிச் செல்ல வழிவகுக்கும்.

சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் செயற்பாடானது ஏனைய திணைக்களுக்கு ஒரு முன்னோடியான செயற்பாடாக அமைகின்றது. அரச உத்தியோகத்தர்கள் வெளி பிரதேசங்களில் இருந்து வருகை தருபவர்கள். ஆனால் சமுதாய அடிப்படை அமைப்புக்கன் உங்களது பிரதேச தேவைகளை நன்கு அறிந்தவர்கள்.

எனவே இங்கு இரண்டு குழுவும் இணையும் போது ஒரு வலுவான கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டு பிரதேச மக்களுக்கு சரியான முறையில் உதவிகளை சென்றடைவதற்கு ஒரு ஊண்டுகோளாக அமைகின்றது. சமுர்த்தி திணைக்களம் வறிய மக்களை தரம் உயர்த்தும் வகையில் தங்களது சேவைகளை மேற்கொண்டு வருகின்றது என்றார்.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஷீஸ், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.தையூப்;, பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நசீர், சமுர்த்தி சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை அதிகாரி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்;, சமுர்த்தி பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறந்த முறையில் செயற்பட்டு வரும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளுக்கு அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களினால் கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்,  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் சேவையை பாராட்டி நினைவுப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.