நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்கள்

2021.02.08 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)
01. கொழும்பு மாவட்டத்தில் பத்தரமுல்ல பெலவத்தயில் அமைந்துள்ள ‘எமது கிராமம்’ சனசமூக மரபுரிமை கண்காட்சி நிலையத்தை பயனுள்ள வகையில் நடாத்திச் செல்லல்
மத்திய கலாச்சார நிதியத்தின் கருத்திட்டமாக ‘எமது கிராமம்’ சனசமூக மரபுரிமை கண்காட்சி நிலையம் ஆரம்பம் தொடக்கம் இதுவரை நிர்வகிக்கப்பட்டு வந்ததுடன், தற்போது குறித்த நிர்வாக நடவடிக்கைகள் புத்தசாசன, கலாச்சார மற்றும் மத விவகாரங்கள் அமைச்சின் வழிகாட்டலில் தேசிய மரபுரிமைகள் அரங்கக்கலைகள் மற்றும் கிராமிய கலைஞர்களின் மேம்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சால் மேற்கொள்ளப்படுகின்றது. 13 ஏக்கர் 03 றூட் 25.1 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய இந்நிலையத்திற்கு நிரந்தர பணியாளர் குழாம் மற்றும் நிர்வாகப் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக நிதியொதுக்கீட்டு செலவு விடயம் இன்மையால், குறித்த நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெறுவதாகத் தெரியவந்துள்ளது. அதனால் ‘எமது கிராமம்’ சனசமூக மரபுரிமை கண்காட்சி நிலையத்தை நடாத்திச் செல்வதற்காக நிரந்தர பணியாளர் குழாமினை நியமித்து முறையாக குறித்த நிறுவனத்தை நடாத்திச் செல்வதற்கு இயலுமான வகையில் புத்தசாசன, கலாச்சார மற்றும் மத விவகாரங்கள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. இலங்கையில் பிராந்திய ரீதியான வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள்
பிராந்திய ரீதியான வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் சர்வதேச வியாபாரத்தின் முக்கிய இயல்புகளாக அமைவதுடன், கடந்த சில வருடங்களாக அவை அடையாள ரீதியாகவும் சிக்கல்களாலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இலங்கையும் இவ்வாறான வர்த்தக உடன்படிக்கைகள் சிலவற்றில் கைச்சாத்திட்டுள்ளதுடன், சில உடன்படிக்கைகளின் கீழ் அவற்றின் பயன்களை நாட்டிற்கு பெற்றுக்கொள்ள முடிவதில்லை எனத் தெரியவந்துள்ளது. அதனால் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்திலுள்ள அவ்வாறான ஒப்பந்தங்கள் ‘சுபீட்சத்தின் நோக்கு’ தேசிய கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்புடையதான வகையில் மீளாய்வு செய்து குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் புதிய பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய இயலுமையை ஆராய்வதற்கும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வணிகத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. பிரதேச ரீதியான கைத்தொழில் பேட்டைகளில் தொழிற்சாலைகளை நிறுவுவதற்காக காணிகளை ஒதுக்கி வழங்கல்
கைத்தொழில் அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேச ரீதியான கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சி;த்திட்டத்தின் கீழ் 22 முதலீட்டாளர்களுக்கு 35 வருட குத்தகை அடிப்படையில் 08 கைத்தொழில் பேட்டைகளில் காணித் துண்டுகளை ஒதுக்கி வழங்குவதற்காக பிரதேச கைத்தொழில் சேவைகள் குழு மற்றும் கைத்தொழில் அமைச்சின் கருத்திட்ட மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது. குறித்த முதலீட்டாளர்களால் 24,047.85 மில்லியன் ரூபாய்கள் மற்றும் 03 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கருத்திட்டங்களில் முதலீடு செய்யப்படவுள்ளதுடன், 3,326 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புக்களும் உருவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நிபந்தனைகளுக்கமைய குறித்த முதலீட்டாளர்களுக்கு காணித் துண்டுகளைப் பிரித்து வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. மரமுந்திரிகை விதை பூங்கா அமைப்பதற்காக இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்திற்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கல்
எழுவான்குளத்தில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தை நடாத்திச் சென்ற வனாத்தவில்லு இறால்மடுவம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள 86.093 ஹெக்ரயார் (212 ஏக்கர் 02 றூட் 23.95 பேர்ச்சர்ஸ்) காணித்துண்டை அபிவிருத்தி செய்து பயன்படுத்துவதற்காக 1998 ஆம் ஆண்டு யூலை மாதம் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் குறித்த காணியை மரமுந்திரிகை செய்கைக்காகப் பயன்படுத்தி வருகின்றது. இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனமும் வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாய பீடமும் இணைந்து குறித்த காணியில் நாற்று உற்பத்தி நிலையத்தை அமைத்து, இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் காணப்படும் மரமுந்திரிகை வகைகளை ஒன்றுதிரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, பொருளாதார மற்றும் சமூக ரீதியாக உயர்ந்த பெறுமதியைக் கொண்ட குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த காணியை 50 வருட நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கு காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. 150 மெகாவாற் இயலளவு கொண்ட சூரிய மின்னுற்பத்திக்கான பெறுகை செயன்முறை
நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் 150 மெகாவாற் சூரிய மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான பெறுகைச் செயன்முறையை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, 05 பக்கேஜ் இற்கு அமைவாக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கு எதிராக ஆட்சேபனை இல்லாத விலைமனுக் கோரல்களுக்கு வழங்குவதற்காக 2020 செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய பெறுகைகளுக்கு அமைவாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகள், பெறுகை ஆட்சேபனை சபையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 20 வருட காலத்திற்காக அனுராதபுரம்இஹபரண, மாத்தறை, காலி, தெனியாய, கொஸ்கம, மத்துகம, பன்னல, மாஹோ மற்றும் குருணாகல் போன்ற உப மின்வழங்கல் நிலையங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட விலைமுறிக்காரர்களுக்கு குறித்த பெறுகைகளை வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்திலுள்ள பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அகற்றல்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் சீமெந்து உற்பத்திக் கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு கைத்தொழில் அமைச்சு ஆரம்ப திட்டத்தை தயாரித்துள்ளது. அதற்கமைய, குறித்த வளாகத்திலுள்ள  பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அகற்றி தொழிற்சாலை வளாகத்தை துப்பரவாக்குவதற்கு அவ்விடத்தில் கண்காணிப்புச் சோதனையை நடாத்தி பரிந்துரைகள் அடங்கிய தரவு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்திலுள்ள பயன்பாட்டுக்கு உதவாத கட்டிடங்கள், வடிவமைப்புக்கள், இயந்திர உபகரணங்கள் மற்றும் இரும்புத்துண்டுகள் மற்றும் வார்ப்புக்கள் போன்றவற்றை அரசாங்க பிரதம விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில், அரசாங்கத்தின் பெறுகைச் செயன்முறையைப் பின்பற்றி குறித்த பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அகற்றுவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக அதிக பாதிப்புக்குள்ளாகிய துறைகளுக்கான நிதி வசதிகளை வழங்கும் கருத்திட்டம்
கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக அதிக பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறை, ஆடைக் கைத்தொழில்துறை, கட்டுமானத்துறை, வர்த்தகத்துறை, உற்பத்தித்துறை, விவசாய ஏற்றுமதித்துறை மற்றும் சுகாதார சேவைகள் போன்ற துறைகளுக்குத் தேவையான நிதியை வழங்குவதற்காக ஆசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீட்டு வங்கியால் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டு, இலங்கை கொவிட் 19 அவசர மற்றும் பதிலளிப்பு வசதியளித்தல்களின் கீழ் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் பங்குபற்றலுடன் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தின் மூலம் குறித்த துறைகளின் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்குத் தேவையான திரவப்பண வசதிகளை அதிகரிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கப்படும். குறித்த கருத்திட்டத்தின் கீழ் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளுக்கு தலா 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட இரண்டு கடன்தொகை வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், குறித்த இரண்டு வங்கிகள் மூலம் தமது பயனாளிகளுக்கு உபகடன் வசதிகள் வழங்கப்படும். அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் குறித்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவும் மேலதிக நடவடிக்கைகளுக்காகவும் நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. கிராமிய வீதிகள் மற்றும் பாலங்கள் கட்டுமானம்
நெடுஞ்சாலைகள் அமைச்சின் விடயதானத்தின் கீழ் காணப்படும் கிராமிய வீதிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் மூலம் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள நடைபாலங்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துப் பாலங்கள் அடங்கலாக 5,000 கிராமிய பாலங்களை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கிராமிய பாலங்களை நிர்மாணித்தல், அரச கிராமிய வீதி வலையமைப்பின் 100,000 கிலோமீற்றர்களை புனரமைக்கும் நிகழ்ச்சித்திட்டன் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. 2021 ஆம் ஆண்டு தொடக்கம் எதிர்வரும் 05 வருடங்களுக்கான கால்நடை வளங்கள், பண்ணை அபிவிருத்தி மற்றும் பால், முட்டை சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் மூலம் செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டம்
உள்ளூர் பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைக்கு ஏற்புடைய ஏனைய உற்பத்திகளின் இயலுமையை அதிகரிப்பதற்காக தற்போது நடைமுறையிலுள்ள கீழ்க்காணும் கருத்திட்டங்களின் செயற்பாடுகளை சமகாலத்திற்கு ஏற்புடைய வகையில் புதுப்பித்து எதிர்வரும் 05 வருடங்களில் நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• பசும்பால் நுகர்வை ஊக்குவிக்கும் கருத்திட்டம்
• கால்நடை உற்பத்திப் பண்ணைகளை உருவாக்கும் கருத்திட்டம்
• பன்றி வளர்ப்புக் கருத்திட்டம்
• சிறிய மற்றும் நடுத்தர கோழிப்பண்ணை அபிவிருத்தி கருத்திட்டம்
• சிறிய மற்றும் நடுத்தர பால் பசுக்கள் பண்ணை மேம்பாட்டின் மூலம் உற்பத்தித் திறனை அதிகரித்தல்
• இடைக்கால கால்நடை வளங்கள் அபிவிருத்திக் கருத்திட்டம்

10. இரசாயன உரம் விலைமனுக்கோரல் – 2021 பெரும்போக செய்கை (ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் விநியோகித்தல்)


2021 பெரும்போக செய்கைக்கான ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் விநியோகிப்பதற்காக வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி (லக் உரம்) மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி போன்ற நிறுவனங்களுக்கு இரசாயன உரம் பெறுகைக்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. குறித்த விலைமனுக்கள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய கீழ்க்காணும் வகையில் உர விநியோகத்தை வழங்குவதற்காக கமத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• யூரியா (கிறனியுலர்) 40,500+-5% மெட்ரிக் டொன்களை 270 நாள் கடன் தவணையின் கீழ் 01 மெட்ரிக்டொன் 343.10 அமெரிக்கன் டொலர்களுக்கு சிங்கப்பூர் ஓவர்சீஸ் என்ரபிறைசஸ் பிறைவட் லிமிடட் நிறுவனத்திற்கு வழங்கல்

• யூரியா (பிறீல்ட்) 8,500+-5% மெட்ரிக் டொன்களை 180 நாள் கடன் தவணையின் கீழ் 01 மெட்ரிக்டொன் 364.74 அமெரிக்கன் டொலர்களுக்கு வெலன்ஷி இன்ரநெஷனல் பிறைவட் லிமிடட் நிறுவனத்திற்கு வழங்கல்

• மியூரியேட் ஒப் பொடாஸ் 13,900+-5% மெட்ரிக் டொன்களை 180 நாள் கடன் தவணையின் கீழ் 01 மெட்ரிக்டொன் 258.74 அமெரிக்கன் டொலர்களுக்கு அக்றிகல்சரல் றிசோசஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட் பிறைவட் லிமிடட் நிறுவனத்திற்கு வழங்கல்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.