அமைதியான ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயகத்தில் முக்கியமான விடயம்- பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி குறித்து அமெரிக்க தூதுவர்
அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்த ஜனநாயகத்திலும் முக்கியமான விடயம் என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் நியாயபூர்வமான கோரிக்கைகள் செவிமடுப்பது முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் ஒன்றில் அவர் இதனை பதிவுசெய்துள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான நடைபயணி குறித்து தமிழ்ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது குறித்து அறிந்தேன்,கொழும்பை அடிப்படையாக கொண்ட ஊடகங்கள் ஏன் இதற்கு பரந்துபட்ட முக்கியத்துவத்தை வழங்கவில்லை என ஆச்சரியப்பட்டேன் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை