மின்குமிழை கொள்வனவு செய்தும் அதனை பொருத்த முடியாமல் உள்ளது-ஆதங்கப்பட்ட உறுப்பினர்

மின்குமிழை கொள்வனவு செய்தும் அதனை பொருத்த முடியாமல் இருப்பதாகவும் கல்முனை வாழ்  இளைஞர்கள் அதனை பொருத்துவதற்கு முன்வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின்  கல்முனை மாநகர சபை உறுப்பினர் கந்தசாமி சிவலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்முனை ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை(9) இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

எமது கல்முனை மாநகர சபையின் 33 ஆவது அமர்வின் போது பாதீடு தொடர்பில் எம்மால் வாக்களிக்கப்பட்டது.உண்மையில் இந்த பாதீட்டிற்கு எதிராக வாக்களித்தமைக்கு முக்கிய காரணம் முதல்வருடன் கொண்ட தனிப்பட்ட குரோதமோ  வெறுப்புக்களோ அல்ல. இந்த வாக்களிப்பின் போது எமது இளைஞர்கள் பொதுமக்கள் விடுத்த நியாயமான கோரிக்கைகளை ஏற்று தான் பாதீட்டிற்கு எதிராக எமது நியாயமான குறைபாடுகள்  வேண்டுகோள்களை கூறி வாக்களித்தோம்.அந்த வகையில் ஒவ்வொரு மாநகர சபையின் அமர்வின் போதும் தன்னிச்சையாக சட்டங்கள் கட்டளைச்சட்டங்களை கூறி முதல்வர் நடந்து கொள்கின்றார்.இதனை கருத்தில் கொண்டும் முதல்வருக்கு எதிராக நாம் வாக்களித்திருந்தோம்.இவ்வாறான விடயங்களை வைத்துக்கொண்டு எமது பகுதிகளில் இடம்பெறும் திண்மக்கழிவுகள் தொடர்பான பிரச்சினை மற்றும் மின்விளக்குகள் ஒளிராமை தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு எவ்வித பதிலும் கிடைப்பதில்லை.சபையில் குறைகளை சுட்டிகாட்டி கதைக்கின்ற போது பிழையானவர்களாக  எம்மை அடையாளப்படுத்துகின்றனர்.

எமது கல்முனை 12 வட்டாரமானது அதிக மக்களை கொண்டஒரு பிரதேசமாகும்.இப்பகுதி மக்கள் என்னை அதிகமாக வாக்களித்து சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்து அனுப்பியுள்ளனர்.இவ்வாறு இருந்த போதிலும் எனது சொந்த நிதியில் தற்போது மின்குமிழை கொள்வனவு செய்து அதனை பொருத்த முடியாமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளேன்.முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய போது பல்வேறு காரணங்களை கூறி தட்டிக்களிக்கின்றார்.எனவே கல்முனை வாழ்  பொதுமக்கள் இளைஞர்களிடம் இவ்விடயத்தை தெரியப்படுத்த விரும்புகின்றேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.