தேர்தல் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டது!
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த செயலகத்தில் பணியாற்றிவந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இன்றும் நாளையும் தேர்தல் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை