கல்முனை -சமுர்த்தி வங்கியில் ஒன்லைன் கொடுக்கல் வாங்கல் சேவை ஆரம்பம்
–
(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை பிரதேச செயலகப்பிரிவின் கீழ் வரும் கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியானது நேற்று புதன்கிழமை (17)மக்களுக்கான நாளாந்த கொடுக்கல்,வாங்கல் நடவடிக்கைகளை ஒன்லைன்( Online )செயற்பாட்டினூடாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வங்கியின் உதவி முகாமையாளர் எம்.ஐ.எம்.முஜீப் அவர்களின் நெறிப்படுத்தலிலும், வங்கியின் முகாமையாளர் மோஷஸ் புவிராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனைப் பிரதேச செயலக சிரேஷ்ட தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்கள் கலந்துகொண்டதுடன் மேலும் வலய உதவிமுகாமையாளர், வங்கியின் பணிக்குழுவினர்கள் கட்டுப்பாட்டுச்சபைத் தலைவர் கலாபூஷணம் ஐ.எல்.நெய்னா முகம்மட் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை