பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி:சிறீதரனிடம் ஒட்டி சுட்டான் பொலிசார் வாக்கு மூலம்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் இன்றைய தினமும் பொலீசாரினால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் வைத்து வாக்கு மூலம் பெறப்பட்டது.
இன்றைய தினம் வாக்கு மூலத்தை ஒட்டி சுட்டான் பொலிஸ் பிரிவினர் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டனர்.
நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பொலீசாரினாலும் அதற்கு முன்பு கிளிநொச்சி பொலிசாரினாலும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்கு மூலத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை