மலையகத்தில் மகா சிவராத்திரி விரதம் மிக சிறப்பாக இந்துக்களால் அனுஷ்ட்டிக்கப்பட்டன…

(க.கிஷாந்தன்)

ஆனவம், கன்மம், மாயை ஆகிய  மும்மலங்களை அடக்கி ஆளும் இந்துக்களின் சிறப்புமிக்க விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரதம் மிக சிறப்பாக இந்துக்களால் அனுஷ்ட்டிக்கப்பட்டன.

மகா சிவராத்தியினை முன்னிட்டு சிவ ஆலயங்களில் 11.03.2021 அன்று பகல் முதல் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் மகா சிவராத்திரி நுவரெலியா ஸ்ரீ லங்காதீஸ்வர ஆலய காயத்திரி பீடத்தில் மகா சிவராத்திரி விழா மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றன.

இப் பூஜையில் விநாயகர் வழிபாடு, பாலாபிசேகம், தேன் அபிசேகம், பஞ்சாமிர்த அபிசேகம், சங்காபிசேகம், திரவிய அபிவிசேகம் உட்பட பல்வேறு அலங்கார அபிசேகங்கள் இடம்பெற்றதுடன் இரவு முழுவதும் நான்கு சாமப் பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றன.

அதனை தொடர்ந்து சிவராத்திரி விரதத்தின் சிறப்பு தொடர்பாக ஆலய அறங்காவலர் சக்திவேல் சந்திரமோகன் அவர்களின் சொற்பொழிவும் இடம்பெற்றது.

இவ்விஷேட பூஜை வழிபாடுகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.