வெளிநாடுகளில் பணிபுரிபவர்களை அழைத்துவர நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் ஊடாக வெளிநாடுகளில் பணிபுரிபவர்களை நாட்டுக்கு அழைத்து வருதல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏனையவர்களுக்கு தமது பணிக்காலம் நிறைவடைந்தவுடன் நாடு திரும்புவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அனைத்து மவட்டங்களிலும் ஒரு ஹோட்டல்கள் அல்லது தங்குமிட வசதிகள் கொண்ட இடங்களை தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தேரிவுசெய்யப்பட்ட நிலையங்களின் தகவல்கள் கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.