கொழும்பு ,கண்டி பிரதேசங்களில் காற்று மாசடையும் தன்மை அதிகம்

கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் காற்று மாசடைதல் உலக சுகாதார அமைப்பினால் சிபாரிசு செய்யப்பட்ட மட்டத்திலும் பார்க்க கூடுதலாக அதிகரித்திருப்பதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகர எல்லை பகுதிகளை தவிர்ந்த நாட்டில் ஏனைய பிரதேசங்களில் காற்று மாசடைதல் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது.

இருப்பினும் கொழும்பு மற்றும் கண்டி நகரங்களில் காணப்படும் காற்று மாசடைதல் அளவு உலக சுகாதார அமைப்பினால் சிபாரிசு செய்யப்பட்ட மட்டத்திலும் பார்க்க அதிகரித்திருப்பது தெரிய வந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை மருத்துவ சபையினால் இன்று (23) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக செயலமர்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

காற்று மண்டலத்தின் அளவு ஒரு சதுர மீட்டருக்கு மைக்ரோ கிராம் 50க்கும் குறைவான மட்டத்தில் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சிபாரிசு செய்துள்ளது.

இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் இந்த நிலைமை கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களில் 150 – 165 வரையில் அதிகரிக்கும் நிலைமை உண்டு.

விசேடமாக கண்டி நகரம் மலையக பிரதேசத்தின் மத்தியில் காணப்படுவதினால் அங்கு காற்று மண்டலத்தில் உள்ள மைக்ரோ அளவு விலகிச்செல்வதில்லை.

இதேபோன்று கொழும்பு நகரத்திற்கு அருகாமையில் கடல் இருப்பதினால், அதன் காற்றின் காரணமாக மைக்ரோவின் அளவு காற்று மண்டலத்தில் தங்கியிருப்பதில்லை.

இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் இந்தியாவில் இருந்து வரும் காற்றுடன் அதன் வாயு மண்டலத்தின் மைக்ரோ பிரிவு கொழும்பு நகரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காற்று மாசடைவதில் 65 சதவீததிற்கு பொறுப்பு கூறவேண்டியது வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை என்பதினால் கொழும்பு நகரத்திலும் கண்டி மாவட்டத்திலும், குருநாகல் மற்றும் காலி நகர எல்லை பகுதிகுள்ளும் இது பாதிப்பான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கொவிட் – 19 தொற்று முடிவை நெருங்கி கொண்டிருந்த போதிலும் கண்டி நகரத்தில் சிறுவர்களும், வயதானவர்களும் முகக்கவசம் அணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுமாயின், மின்சக்தி மற்றும் சூரிய சக்தி மூலமாக செயற்படக் கூடிய வாகன இறக்குமதிக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்துவதற்கும் காற்றின் நிலைமையை அளவிடும் இடங்கள் தற்பொழுது 2 இடங்களில் மாத்திரமே காணப்படுவதினால் இந்த இடங்களின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

வெளிநாடுகளில் இடம்பெறும் மரங்களை தரித்தல் போன்ற புகைப்படங்களை உள்ளடக்கி அவை இலங்கையில் இடம்பெறுவதாக சில முன்னனி ஊடகவியளாலர்கள் கூட முகப்புத்தகங்களில் குறிப்பிடுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.