திருக்கோயில் விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் குறைபாடுகள் தொடர்பில் நேரடியாக பார்வையிடச் சென்ற பியசேன கிருத்திகன்

திருக்கோயில் விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் தீயில் கருகிய மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தை நீர் வளங்கல் அமமைச்சரின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகன் பாடசாலையின் குறைபாடுகள் தொடர்பில் நேற்று பாடசாலைக்கு நேரடியாக பார்வையிடச் சென்றார் அத்துடன் பாடசாலையின் மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தை பார்வையிடச் சென்றதுடன் இதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார் .

மேலும் பாடசாலையில் தீயில் கருகிய மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தை பார்வையிடச் சென்ற பொழுது பியசேன கிருத்திகன் கூறியதாவது,

அரசியல் இல்லாமல் அபிவிருத்தி இல்லை என்பதற்கு சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் தீயில் கருகிய இந்த மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடமே நல்ல உதாரணம்.

இலங்கையில் வேறெந்த மூலையிலும் இவ்வாறானதொரு அனர்தம் ஏற்பட்டிருக்குமேயானால் ஓர் இரு மாதங்களிலேயே இது திருத்தியமைக்கப்பட்டு மாணவர்களது பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டிருக்கும் மாணவர்களும் உச்ச பச்ச பலனை அடைந்திருப்பார்கள்.

இவ்வளவு காலமும் இதை திருத்தியமைப்பதிலே பாராமுகமாக இருந்த அரசியல்வாதிகள் தமிழினத்திற்கான சாபக்கேடு தமிழினம் கல்வியில் வளர்ச்சியடைந்து விட கூடாது என்று திடசங்கற்பம் பூண்டு செயற்படும் தலைமைகளும் எம் மத்தியில் மலிந்து காணப்படுகிறார்களா?என அஞ்ச தோன்றுகின்றது.

இப்பிரதேச மாணவர்களுக்கு இந்த அவலம் சொல்ல முடியாத இழப்பாகும்.

கல்வியில் இடை விலகல் என்பது 5ம் 6ம் ஆண்டு படிப்பை விட்டு விடுவது மட்டுமல்ல.கபொத சாதாரண ,உயர்தரப் பரீட்சையில் சித்தியடைய முடியாமல் பின்னடைவதும் இடை விலகளேயாகும்.இவ்வாறான அவலம் எமது தமிழ் பிரதேசங்களில் தான் எல்லை கடந்து காணப்படுகிறது.

சமூக அக்கறையாளர்கள் என கூறி கொண்டு பெறுமதியற்ற விடயங்களில் ஆர்பாட்டாமாக கூடி களைபவர்கள் மிகுந்து காணப்படுப்படும் அவலமும் எமது பகுதியில் தான் காணப்படுகிறது.பொறுப்பற்ற புத்தி ஜீவிகளும் ஏறுக்குமாறான நலன் விரும்பிகளும் மிகுந்ததால் வந்த வினையா இது.

எனவே இன்று நான் உறுதி கூறுகிறேன்.ஓர் இரு நாட்களுக்கு முன்னர் தான் இது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.எனவே ஓர் இரு மாதங்களுக்குள் இதை பூர்த்தி செய்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் முயற்சி செய்கிறேன்.என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.