கொரோனா நீங்க இ.கி.மிசனில் விநாயகர் சதுர்த்தி விசேட பூஜை வழிபாடு…

( வி.ரி.சகாதேவராஜா)

வேழமுகத்து விநாயகன் பிறந்த நாளான நேற்று(10) விநாயகசதுர்த்தி நாளாகும். ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வருகின்ற சதுர்த்தி தினத்தில் விநாயகப்பெருமான பிறந்தார்.

அதனையொட்டி இராமகிருஸ்மிசன் மட்டக்களப்பு கல்லடி ஆச்சிரமத்தில் விசேட பூஜையும் வழிபாடும் இடம்பெற்றது.விநாயகப்பெருமான் அறுகம்புல்லினால் அலங்கரிக்கப்பட்டு 21 நிவேதனங்கள் படைக்கப்பட்டன.

நாடு கொரோனாத் தொற்றிலிருந்து விடுபட வேண்டி அங்கு விசேட யாகமும் சிறப்புப்பூஜையும் இடம்பெற்றது.

இராமகிருஸ்மிசன் மட்டக்களப்பு கல்லடி ஆச்சிரம உதவிமேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் இச்சிறப்பு பூஜையை நடாத்தினார்.

சுகாதாரமுறைப்படி இல்லச்சிறுவர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்