அத்தியாவசிய உணவுப்பொருள் கொள்கலன்களை இறக்குவதில் சிக்கல்- உணவு இறக்குமதியாளர் சங்கம்.

வெளிநாடுகளிலிருந்து வந்த அத்தியாவசிய உணவுப் பொருள் அடங்கிய கொள்கலன்களை இறக்குவது கடினம் என உணவு இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்கள் எதிர்காலத்தில் இல்லாது போகும் அபாயம் உள்ளது என அதன் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன கூறினார்.

துறைமுகத்திலுள்ள சுமார் 800 கொள்கலன்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை விரைவில் வெளியேற்றாவிட்டால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாகவும் இல்லையென்றால் ஒக்டோபர் இறுதி வரை மட்டுமே தற்போதுள்ள கையிருப்பு போதுமானதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்