கிராம சேவகரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்)

அம்பன்பொல தெற்கு கிராமசேவகர் கொல்லப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று வியாழக்கிழமை (07.10.2021) கவனஈர்ப்புப் போராட்டம் ஒன்று அமைதியன முறையில், நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

நிக்கவரட்டிய பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட, அம்பன்பொல பொலிஸ் பிரிவில், அம்பன்பொல தெற்கு கிராமசேவகர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இதனை கண்டித்து மலையகத்தில் சில இடங்களில் கிராம சேவகர்களின் காரியாலயங்களுக்கு முன்பாக கறுப்பு மற்றும் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததோடு, போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது, மரணமடைந்த எமது சக உத்தியோகஸ்தரின் மரண விசாரணையைத் துரிதப்படுத்துங்கள், இனிமேலும் இந்த இரத்த வெறியாட்டம் வேண்டாம், அரசே கிராம உத்தியோகஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கு, பொதுமக்கள் சேவகனுக்கு கிடைத்த பரிசா இது, கயவர்களைக் கைது செய், போன்ற கருத்துகளை போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்