மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தினால் பொது நூலகத்திற்கு நூல்கள் வழங்கி வைப்பு.

மாவடிப்பள்ளி- மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தினால் “கல்விக்கும் கரம் கொடுப்போம்” எனும் வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான நூல்களை நூலகங்களுக்கு அன்பளிப்பு செய்யும் முதலாம் கட்ட  நிகழ்வு செவ்வாய்க்கிழமை (19) கழகத்தின் தலைவர் ஏ.ஜே.எம். அஷ்ரப் பலாஹி அவர்களின் தலைமையில் மாவடிப்பள்ளி பொது நூலக வளாகத்தில் இடம்பெற்றது.

மாவடிப்பள்ளி பொது நூலகமானது பல வருடங்களாக இயங்கி வரும் வரலாற்றை கொண்டிருந்தபோதும் தற்போது நூலகத்தில் போதுமான அளவு நூல்கள் இல்லாமையினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தது. இந்த நிலையில் மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தினரின் முயற்சியினால் எச்.எம்.அர்ஷாத் அவர்களினதும் கழக உறுப்பினர்களினதும் நிதி உதவியின் மூலம் இந்தப் பொது நூலகத்திற்கான நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான எம்.என். எம். றணீஸ், எம். ஜலீல், மாவடிப்பள்ளி ஜும்மாப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் என். எம். மஹ்ரூப், மாவடிப்பள்ளி அல்- அஷ்ரப் மகா வித்தியாலய பிரதி அதிபர் ஏ.எல்.றஜாப்தீன், பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன் மற்றும் மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் போசகர்களான ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.வை.மனாப், ஆசிரியர் எஸ்.எச்.யாக்கூப் ஹசன் மற்றும் பேர்ல்ஸ் விளையாட்டு கழக நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.