கந்தப்பளையில் மண்சரிவால் சேதமுற்ற வீடு; நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் நேரில் சென்று பார்வை

நேற்று நிலவிய சீரற்ற காலநிலையால் நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்துக்குட்பட்ட கந்தப்பளை கொங்கோடியா மேற்பிரிவு வட்டாரத்தில் ஏற்பட்ட மண் சரிவில் வீடொன்று முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் அங்குள்ள சுமார் ஐந்து குடும்பங்களுக்கு அபாய முள்ளதாக அறிய முடிகிறது.
இதனடிப்படையில் இன்று (30) காலை குறித்த இடங்களுக்கு நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் நேரில் சென்று பார்வையிட்டு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகக் கூறியதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான தற்காலிக குடியிருப்பு களை தோட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொடுத்ததுடன் சரிந்து விழுந்த மண் மேடுகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் தொடர்பு கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வ தற்கும் அனைத்து உதவிகளையும் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் அவர்கள் மேற்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.