சாய்ந்தமருது அல் – ஹிலால் வித்தியாலயத்தின் சேவை நலன் பாரட்டு விழா

கல்முனை கல்வி வலய, சாய்ந்தமருது கல்விக்கோட்டத்தின் கமு/ கமு/அல் – ஹிலால் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர் திருமதி.எச்.ஏ.லத்திப், அல் – ஹிலால் வித்தியாலயத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்று அக்கரைப்பற்று மத்திய தேசிய பாடசாலையில் அதிபராக கடமை புரியும் ஏ.பி. முஜீன் அவர்களையும் பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வு பாடசாலையின் அதிபர் யு.எல்.நஸார் தலைமையில் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வின் விசேட அதிதிகளாக பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளரும், கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளளருமான ஏ.எம்.சாஹிர், கல்முனை வலய கல்வி அலுவலகத்தின் பிரதம கணக்காளர் வை.ஹபிபுல்லாஹ், கல்முனை கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர்கள், உதவி கல்வி பணிப்பாளர்கள், மட்டக்களப்பு அரச ஹோமியோபதி வைத்தியசாலையின் வைத்தியர், டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசலையின் உடல் நல நடமாடும் சேவை நிலையத்தின் பணிப்பளார் டாக்டர் எம்.ஏ.எம். முனீர் பாடசலை பிரதி அதிபர் றிப்கா அன்சார், உதவி அதிபர் எம்.எச்.நுஸ்ரத் பேகம், பகுத்தலைவர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்