துரோகிகளை தூக்கி வீசிய மக்கள் காங்கிரஸ் தலைவரின் செயற்பாட்டை மனதார மெச்சுகிறேன் : காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீல்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அரசின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதியுயர்பீடத்தின் முடிவை தனது சொந்த நலனுக்காக உதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாக முடிவெடுத்து வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக கையூயர்த்தி சொல்லொன்னாத் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் மக்கள் காங்கிரசின் தலைமைக்கும் மேலும் மேலும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஷரப் முதுனபின், இசாக் ரஹ்மான், மற்றும் அலிசப்ரி றஹீம் ஆகியோரை வண்மையாக கண்டிக்கிறேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீல் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், நயவஞ்சகத்தனமான செயற்பாட்டைச் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்து இடைநிறுத்திய செயற்பாட்டை பாராட்டுவதோடு சொல்லன்னா பல துயரங்கள், துன்பங்களை இந்த அரசாங்கம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு விடுக்கும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும்  திடகாத்திரமான முடிவை எடுத்து வரவுசெலவு திட்டத்தை எதிர்த்து வாக்களித்த தலைவருக்கு என்றென்றும் நம்பிக்கையாகவும் விசுவாசமாக இருக்க தவறிய அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஏனையே பிரதேசங்களில் உள்ள எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டில் உள்ள ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபை உறுப்பினர்களையும் இணைத்து அவர்களுக்கு எதிராக மாபெரும் கண்டன மசோதாவை நிறைவேற்ற எண்ணியுள்ளேன்.

இந்த முனாபிக் தனமான செயற்பாட்டால் மனமுடைந்து காணப்படும் கட்சி ஆதரவாளர்கள் விழித்தெழுங்கள். இவ்வாறானவர்கள் இனி எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாத வகையில் அவர்களை சமூகத்திலிருந்து விரட்டி அடித்து நற்பண்புள்ள  நல்லொழுக்க அரசியல் கலாச்சாரமுல்ல அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க  ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.