இன்றைய காணொளி

கொவிட் 19 தொற்றிலிருந்து 865 பேர் குணமடைந்தனர்

கொவிட் 19 தொற்றிலிருந்து 865 பேர் இன்று(14) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 68,696 ஆக அதிகரித்துள்ளது. மேலும்  இலங்கையில் இதுவரை 384 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஆலையடிவேம்பில் சுமார் 44 பவுண் தங்க நகைகள் கொள்ளை!

https://youtu.be/OyctkgsFRaM அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சுமார்  44 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் கடந்த 12 ஆம் திகதி அதிகாலை ஒரு மணி தொடக்கம் 3 மணிவரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிவதுடன் இதனை கொள்ளையிடப்பட்ட வீட்டின் உரிமையாளர் இன்று (16)உறுதி ...

மேலும்..

உயர்தரப் பரீட்சாத்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.   செயன்முறை பரீட்சையில் தோற்றும் மாணவர்கள், தமது பரீட்சை அனுமதி சீட்டை பரீட்சை மத்திய நிலையங்களுக்கு காண்பிப்பது கட்டாயமானது என பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ...

மேலும்..

மட்டக்களப்பு- தேற்றாத்தீவு வாவியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு- தேற்றாத்தீவு கடற்கரையை அண்டிய வாவிபகுதியில் ஆணொருவரின் சடலம், இன்று (08) கரையொதுங்கியுள்ள நிலையில்  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் 60 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதுவரை அவர் தொடர்பாக எந்ததொரு தகவலும் கிடைக்கவில்லை ...

மேலும்..

கிளிநொச்சி விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச விளையாட்டரங்கை பொறுப்பேற்று சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில், கிளிநொச்சி விளையாட்டரங்கு ...

மேலும்..

சீரற்ற காலநிலையினால் 50,206 பேர் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக 14,970 குடும்பங்களை சேர்ந்த 50,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, ...

மேலும்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வில் சதித்திட்டம் போராட்டம் வெடிக்கும் என கணேசலிங்கம் எச்சரிக்கை விடுப்பு!

(க.கிஷாந்தன்)   பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வெறும் 25 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு இடமளிக்கமுடியாது. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவும், 25 நாட்கள் வேலையும் அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர் போராட்டம் வெடிக்கும் - என்று பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் தங்கவேல் கணேசலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.   மஸ்கெலியாவில் இன்று ...

மேலும்..

திருகோணமலையில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் கடும் அடை மழை காரணமாக வெள்ள நீரில் மூழ்கின!

கடும் அடை மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன இதில் நேற்று இரவு முதல்(19) காலை வரையான அதிக மழை வீழ்ச்சி காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன இதில் கிண்ணியா, ...

மேலும்..

யாழ். திருநெல்வேலி பொதுச் சந்தையின் வியாபாரிகள் 313 பேரிடம் பி.சி.ஆர் சோதனை…

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகள், 313 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக இன்று (16) பெறப்பட்டன. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு ...

மேலும்..

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இலங்கை விமானப் படையின் விமான விபத்து: ஒருவர் பலி

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இலங்கை விமானப் படையின் PT6 வகை பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் குறித்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. மேலும் குறித்த விமானத்தில் பயிற்சியை மேற்கொண்ட விமானியும் உயிரிழந்துள்ளதாகவும் விமானப்படை தகவல்கள் ...

மேலும்..

அடை மழையிலும் முல்லை மீனவர்கள் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மீனவர்கள் அடைமழையிலும் பாரிய அளவில் திரண்டு 15.12.2020 இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை குறித்த இந்திய இழுவைப் படகுகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரையில் மீனவர்கள் தொடர் போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளனர். இதுதொடர்பில் ...

மேலும்..

லங்கா பிரிமியன் தொடரின் 2வது அரையிறுதி போட்டி இன்று

லங்கா பிரிமியன் தொடரின் 2வது அரையிறுதி போட்டிகள்இன்று (14) இடம்பெறவுள்ளது தம்புள்ள வைகிங் மற்றும் ஜப்னா ஸ்டாலயன்ஸ் அணிகள் 2வது அரையிறுதி போட்டியில் மோதிக் கொள்கிறது. இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 07.00 மணிக்கு, ஹம்பாந்தோட்ட மைதானத்தில் இடம்பெறவுள்ளது. நேற்றைய முதலாவது அரையிறுதி போட்டியில் ...

மேலும்..

(வீடியோ )சுவ தரணி” என்பது இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பானமாகும் – நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் நக்பர்

"சுவ தரணி" என்பது இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பானமாகும் - நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. எல். எம். நக்பர்...   https://youtu.be/i-OokPj82Xk    

மேலும்..

(வீடியோ )நிலைமை பாரதூரமானதாக இருப்பதால் எரிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்ற அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வு செய்யவும்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

  நிலைமை பாரதூரமானதாக இருப்பதால் எரிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்ற அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வு செய்யுமாறும், அது சம்பந்தமான குழுவிலுள்ள நிபுணத்துவமற்றவர்களை நீக்கிவிடுமாறும் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். வரவு – செலவுத் திட்டத்தின் நீதியமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு புதன்கிழமை (9) உரையாற்றுகையிலேயே ...

மேலும்..

(வீடியோ )சாணக்கியனின் மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைக்கு நம்பிக்கையோடு இருங்கள் என்று உறுதியளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

  https://youtu.be/Hhm8FZTKkVg கேள்விகளுக்கான பதிலோடு செயற்பாடுகளும் இருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வாய்மொழி மூலமான கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..