பிரதான செய்திகள்

இளைஞர்களுக்கான மகிழ்ச்சித் தகவல் – நாடாளுமன்றில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக இளைஞர் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களது பங்கேற்புடன் 17 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. 2022.10.05 ஆம் திகதி நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளின் ...

மேலும்..

விருப்பமில்லாதவர்கள் வெளியேறிச் செல்லலாம் – கூட்டமைப்பிற்குள் மூண்டது சொற் போர்; சுமந்திரனுக்கு பதிலடி!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவது பற்றி நான் தெரிவித்த கருத்துக்கள் எமது கட்சியின் முடிவுகளே. அவை ஒன்றும் தெரியாமல் சொன்ன விடயங்கள் அல்ல எனத் தெரிவித்த புளொட்டின் யாழ் மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன், நாங்கள் ஒரு கட்டமைப்பாக இயங்குவோம். ...

மேலும்..

தினேஷ் ஷாஃப்டர் கொலை: முன்னாள் வர்ணனையாளருக்கு பயணத் தடை விதிப்பு

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வர்ணனையாளர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல நேற்று மாலை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அவரிடம் இரண்டு கடவுச்சீட்டுகள் ...

மேலும்..

கஜேந்திரகுமார் கூறுகின்ற முன்நிபந்தனைதான் என்ன? – தனக்கும் அது விளங்கவே இல்லை என்கிறார் சுரேஷ்

“இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் எதனைக் கூறுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. சமஷ்டி தருவதாக உறுதியளித்தாலே பேச்சுவார்த்தைக்கு வருவோமென கூறுவதா அல்லது எதனை முன்நிபந்தனை எனக் கூறுகிறார் என்பது ...

மேலும்..

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி அலைந்த தாய் சாவு!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா, கல்மடு – பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே (புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில்) நேற்று மரணமடைந்துள்ளார். இவரது மகன் இராமச்சந்திரன் ...

மேலும்..

தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு! – செயலில் களமிறங்கியுள்ளோம் என்கிறார் பிரதமர்

“தமிழ், முஸ்லிம் மக்களின் தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்” – என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஊடகவியலாளர் தமது கேள்வியில், ‘பெரும்பாலும் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். ...

மேலும்..

சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு

சொந்த மகளை மதுபோதையில் பாலியல் வண்புணர்வு புரிந்த தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். மகளையே பாலியல் வண்புணர்வு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற ...

மேலும்..

ஆரம்பமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று(16) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சட்டப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது இறக்குமதி செய்யப்பட்டவுள்ள 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை ...

மேலும்..

காணாமல்போனோர் விவகாரத்தைச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கையாளும்! – அரசு முடிவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இழுபடும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுடன் நடுநிலைத் தரப்பாக நேரடியாக ஊடாடி விடயங்களைக் கையாள்வதற்கென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவையைப் பெறுவதற்கு அரசின் உயர்மட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறியவருகின்றது. செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் பணியை மீண்டும் ...

மேலும்..

அரசுடன் பேசச் சென்றமை பச்சைத்துரோகம்! – கஜேந்திரகுமார் காட்டம்

இலங்கை அரசு, பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்தத் தருணத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருந்தும், எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுக்குச் சென்றமை இனத்துக்கும் தியாகங்களுக்கும் செய்த பச்சைத்துரோகம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற ...

மேலும்..

ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்த நினைக்கும் ரணில்! – ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்த நினைக்கின்றார்” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “ஜனாதிபதி ...

மேலும்..

ஜனாதிபதி, இந்திய கடற்படைத் தளபதி பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரி குமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியும் இந்திய ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோரை படுகொலை செய்துவிட்டீர்கள்- சர்வகட்சிக் கூட்டத்தில் சம்பந்தன் கடும் சீற்றம்

"காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால், என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.'' - இவ்வாறு கருத்துத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...

மேலும்..

அரசியல் தீர்வு காண விரைந்து நடவடிக்கை – சர்வகட்சிக் கூட்டத்தில் இணக்கம்

இலங்கையில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் அனைத்தும் இணக்கம் வெளியிட்டுள்ளன. குறிப்பாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக வைத்து, ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் தீர்வை நோக்கி பயணிப்பதற்கு தென்னிலங்கை சிங்களக் ...

மேலும்..

இன்று நள்ளிரவு முதல் சீமெந்து விலை குறைப்பு !

இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்சி கோர்ப்பரேஷன், இன்சி போர்ட்லண்ட் சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 2,750 ரூபாவாகும். முன்னதாக ஒரு மூடை சீமெந்தின் விலை ...

மேலும்..