இளைஞர்களுக்கான மகிழ்ச்சித் தகவல் – நாடாளுமன்றில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக இளைஞர் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களது பங்கேற்புடன் 17 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

2022.10.05 ஆம் திகதி நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த குழுக்களினால் நடத்தப்படும் ஒவ்வொரு விசாரணை தொடர்பிலும் குழுக்களிற்கு உதவியளிப்பதற்காக குழுவொன்றின் தவிசாளருக்கு ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை அழைப்பதற்கு முடியும் என்பதால், ஒவ்வொரு குழுவுக்கும் இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்களுக்கான மகிழ்ச்சித் தகவல் - நாடாளுமன்றில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு! | Government Job Sri Lanka Parliament Application

விண்ணப்பதாரிகள் இந்தக் குழுக்களின் விடயங்கள் பற்றிய போதிய அறிவு, தொழில்சார் அனுபவம், தேர்ச்சிகளை பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று 18 வயதிற்கு குறையாதவராகவும் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இது தொடர்பான அனைத்து விபரங்களுடனும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விளம்பரங்களில் வழங்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் கல்விசார், தொழில்சார் தகைமைகள் மற்றும் அனுபவங்கள் பற்றிய சான்றிதழ்களின் பிரதிகளுடன் 2023 ஜனவரி மாதம் 09 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கத்தக்கவாறு “நாடாளுமன்ற செயலாளர் நாயகம், இலங்கை நாடாளுமன்றம், சிறி ஜயவர்த்தனபுர, கோட்டை” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும்.

இளைஞர்களுக்கான மகிழ்ச்சித் தகவல் - நாடாளுமன்றில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு! | Government Job Sri Lanka Parliament Application

சிறிலங்கா நாடாளுமன்றம் துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு உதவியளிப்பதற்காக இளைஞர் பிரதிநிதிகளை தெரிவுசெய்தல் நாடாளுமன்றத்தில் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களது பங்கேற்புடன் பின்வரும் விடயங்களை உள்ளடக்கி, பதினேழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை தாபிப்பதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரமளித்துள்ளது.

(1) மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(2) நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(3) தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(4)தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(5) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(6) பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(7) பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(8) வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(9) உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(10) சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(11) கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(12) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(13) நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(14) சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(15) சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(16) ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.
(17) வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு.

2022.10.05 ஆம் திகதி நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த குழுக்களினால் நடத்தப்படும் ஒவ்வொரு விசாரணை தொடர்பிலும் குழுக்களிற்கு உதவியளிப்பதற்காக குழுவொன்றின் தவிசாளருக்கு தலா ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை அழைக்கமுடியும் என்பதுடன், பின்வரும் தகைமைகள் மற்றும் அனுபவங்களை கொண்டுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து அதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

(இந்த தகவலை www.parliament.lk என்ற இணையத்தளத்தினூடாகவும் பெற்றுக்கொள்ளமுடியும்.)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.