இலங்கை செய்திகள்

இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவர் தலைமறைவு: சந்தேகநபரை தேடி அதிரடிப்படையினர் வலைவீச்சு

இந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்த சந்தேகநபர் உடுத்துறையில் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் அவரை தேடும் நடவடிக்கையில் அதிரடிப்படையினர் ஈடுப்பட்டுள்ளனர். வடமராட்சியைச் சேர்ந்த படகு உரிமையாளரே இவ்வாறு அதிரடிப்படையினரால் தேடப்பட்டு வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி- உடுத்துறை கடற்கரையில் இன்று (சனிக்கிழமை) ...

மேலும்..

கந்தகாட்டில் மற்றொரு ஆலோசகருக்கு கொரோனா: 70 சிறுவர்கள் உள்பட 300 பேர் தனிமைப்படுத்தலில்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கு மற்றொரு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகியங்கனையைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதனையடுத்து அவர் பழகிய 70 சிறுவர்கள் ...

மேலும்..

அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமாயின் சஜித்தை பிரதமராக்குங்கள்- ரிசாட்

அனைத்து  மக்களும் இன, மத பேதமின்றி ஒத்துமையாக வாழவேண்டுமாயின் சஜித் பிரேமதாசவை நாட்டின் பிரதமராக்க அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

சிறுவர்களின் கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பிகளை அகற்ற கிடைத்தமை மிகப்பெரும் பாக்கியம் என்கின்றார் பிரதமர்

வடக்கு , கிழக்கில் வாழ்ந்த சிறுவர்களின் கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பிகளை அகற்ற கிடைத்தமை, மிகப்பெரும் பாக்கியமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால், ...

மேலும்..

கேப்பாப்பிலவு மக்களை மீண்டும் காணிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிப்பு

2017 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணியிலிருந்து, பொது மக்களை மீண்டும் வெளியேறுமாறு, கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் ஊடாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முல்லைத்தீவு- கேப்பாப்பிலவு, சூரிபுரம் பகுதியில் 1990 ஆண்டில் இருந்து மக்களினால் குடியிருப்பாகவும் விவசாய நிலமாகவும் பயன்படுத்தப்பட்டுவந்த சுமார் 50 ஏக்கர் ...

மேலும்..

ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

கொழும்பில் ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவலர்த்தன அச்சுறுத்தப்பட்டமையினைக் கண்டித்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு, காந்தி பூங்காவின் முன்னாள் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடி இன்று (சனிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். கொழும்பில் நேற்று ஒரு வழக்கு தொடர்பிலான செய்தி சேகரிப்பில் ...

மேலும்..

கிளிநொச்சியில் மாதிரி வாக்கெடுப்பு

கிளிநொச்சியில் மாதிரி வாக்கெடுப்பு இன்று (சனிக்கிழமை) காலை நடத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலக வளாகத்தில் குறித்த மாதிரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பது தொடர்பான செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் ...

மேலும்..

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நாவலப்பிட்டிய மக்கள் உற்சாக வரவேற்பு

பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாவலப்பிட்டியவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அப்பகுதி மக்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உற்சாக வரவேற்பளித்துள்ளனர். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கண்டி மாவட்டத்தில் ...

மேலும்..

சமூக பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன – அரசாங்கம்

கொரோனா வைரஸ் சமூக பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் 339 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் பரவல் குறித்து வீண் ...

மேலும்..

போதைப்பொருள் வர்த்தகம் குறித்து தகவல் வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

கிராமப்புரங்களில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகம் குறித்து தகவல் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்த ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்வதற்கான மக்கள் சந்திப்புகளில் பங்கேற்றார். பொதுமக்களுடன் ஜனாதிபதி ...

மேலும்..

யாழில் தேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடல்

தேர்தல் கடமைகளுக்கு சுகாதார தரப்பினர் மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. தெரிவத்தாட்சி உத்தியோகத்தரும் மாவட்ட அரசாங்க அதிபருமான க.மகேசன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல்களில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்கம் அதிபர், ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து நிலந்த ஜயவர்தனவிடம் நீண்ட நேர வாக்கு மூலம் பதிவு

அரச புலனாய்வு துறையின் முன்னாள் பிரதானியும் தற்போதைய கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவிடம், ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து நீண்ட வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 16 நாட்களாக 152 மணி நேரம் வரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக குறித்த ...

மேலும்..

கந்தக்காடு முகாமிலிருந்தவர்களுடன் தொடர்பினை வைத்திருந்தவர்களை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பம்

கந்தக்காடு புனர்வாழ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுடன் தொடர்பினை வைத்திருந்தவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரும் தேசிய புலனாய்வு பிரிவினரும் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். குறித்த நடவடிக்கை காரணமாக, மேலும் பலர் தனிமைப்படுத்தப்படலாமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . அத்துடன் கந்தக்காடு ...

மேலும்..

இயக்கச்சி படைமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 71 பெண்கள் வீடுகளுக்கு திரும்பினர்

இயக்கச்சி படைமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 71 பெண்கள், அவர்களின் வீடுகளுக்கு இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டனர். லெபனானிற்கு பணிப் பெண்களாக சென்றிருந்த இவர்கள், நாட்டிற்கு அண்மையில் அழைத்து வரப்பட்டிருந்தனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள், இயக்கச்சி 55 ஆவது படைப்பிரிவிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த 14 நாட்கள் ...

மேலும்..

13 அல்லது 13 பிளஸ்க்கு அப்பால் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்

தேர்தல் காலங்களில் 13 ஆவது திருத்தம் குறித்து கதைப்பது வழமையாகிவிட்டபோதும் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்த நாட்டை இதுவரையில் ...

மேலும்..