கந்தகாட்டில் மற்றொரு ஆலோசகருக்கு கொரோனா: 70 சிறுவர்கள் உள்பட 300 பேர் தனிமைப்படுத்தலில்
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கு மற்றொரு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகியங்கனையைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனையடுத்து அவர் பழகிய 70 சிறுவர்கள் உள்பட 300 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை