இலங்கை செய்திகள்

முரண்பாடு இல்லாத ஜனாதிபதி-பிரதமர் ஆட்சி: மக்களே ஆணை தரவேண்டும்- மஹிந்த

ஜனாதிபதியும் பிரதமரும் முரண்பாடற்ற விதத்தில் இணைந்து செயற்படுவதற்கான சூழ்நிலைமை மக்கள் மீண்டும் வழங்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தனிப்பட்ட குடும்பத்தை இலக்காகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தற்போது நகைச்சுவைக்குள்ளாகியுள்ளது எனவும் அதனை மாற்றியமைக்க ...

மேலும்..

நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் –பாதணிகளுடன் பாதுகாப்பு பிரிவினர்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில், நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் ஆலய சூழலில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் பாதணியுடன் கடமையில் நின்றமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம் தெரிவித்து ...

மேலும்..

முகமாலை துப்பாக்கிச்சூடு – பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு வடக்கு ஆளுநர் உத்தரவு

முகமாலை காரைக்காடு குளப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பாக பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த ...

மேலும்..

அம்பாறையில் பாரிய இரண்டு மீன்கள் கரையொதுங்கி உள்ளன

அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில்,  இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பாரிய மீன்கள் கரையொதுங்கின. இதில் பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி- 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை, பிரதேசவாசிகள் அவதானித்து அப்பகுதி கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர். இதன்போது சம்பவ ...

மேலும்..

வாக்குகளை எண்ணும் நடவடிக்கை குறித்து மஹிந்த தேசப்பிரிய கருத்து

தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தேர்தல் தினத்திற்கு மறு தினம் ஓகஸ்ட் 6ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்திற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் ...

மேலும்..

நாட்டை கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்வதை தடுக்க கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் – கருணாகரம்

அரசாங்கம், நாட்டை ஒரு கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்லும் நிலைமையை நாங்கள் தடுக்க வேண்டுமாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்த வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் ...

மேலும்..

உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி குறித்து ஆராய குழு நியமனம்

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பாக முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீலிப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளரும் ஏனைய மேலதிக செயலாளர்கள் இருவரும் இந்த குழுவில் அடங்குகின்றனர். இம்முறை கல்வி பொதுத்தராதர ...

மேலும்..

படையினர் வசம் 2750 ஏக்கர் காணி; முகாம்களில் 409 குடும்பங்கள்- மணிவண்ணன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் படையினர் வசம் 2750 ஏக்கர் காணி உள்ளமையால், அந்தக் காணிகளுக்குச் சொந்தமான 409 குடும்பங்கள் முகாம்களில் வாழ்ந்து வரும் அவலம் தொடர்ச்சியாக காணப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

இலமுரியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் என்னும் இலங்கை- ஞானசாரருக்கு துரைராஜசிங்கம் பதில்

இலமுரியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் எனவும் அதுதான் இலங்கை என்றும் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். “இலமுரியா கண்டத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள். அந்தக் கண்டத்தின் நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. அந்தக் கண்டம் ...

மேலும்..

தமிழர்கள் பாதுகாப்பான தாயகமொன்றை பெறுவது பற்றிய வழியை நோக்கி நகர வேண்டும்- உறவுகள் அறைகூவல்

தமிழர்கள், பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகமொன்றை பெறுவது பற்றிய வழியை நோக்கி நகர வேண்டுமென வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு, வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் கருத்து ...

மேலும்..

இலங்கையின் ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு உலக வங்கி நிதி உதவி

இலங்கையின் ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு உலக வங்கி நிதி உதவியினை வழங்க முன்வந்துள்ளது. சுகாதார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற முன்னேற்ற மறு ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக திட்டம் தொடர்பான சிரேஷ்ட தொடர்பாடல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், உலக வங்கியின் ...

மேலும்..

தேர்தல் வேட்பாளர்கள் குறித்து தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் குற்றச்சாட்டு

பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பழைய சம்பவங்கள் குறித்து பேசுகின்றனர் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் மாத்திரம் வேட்பாளர்கள் கவனம் செலுத்துகின்றார்கள் என்றால், அவர்கள் நேரத்தை வீணடிக்கின்றார்கள் என்பதே அர்த்தம் என ...

மேலும்..

இலங்கை இராணுவத்திற்கு ஆவின்பாலை விற்பனை செய்வதற்கான யோசனையை நிராகரித்தார் எடப்பாடி!

இலங்கை இராணுவத்திற்கு நாளொன்றிற்கு ஒரு இலட்சம் ஆவின்பாலை விநியோகிப்பதற்கான வியாபாரயோசனையொன்று முன்வைக்கப்பட்டது என தமிழக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். எனினும், இராணுவத்திற்கு ஆவின்பால் விற்பனை குறித்து முன்வைக்கப்பட்ட யோசனையை தமிழ்நாடு அரசு நிராகரித்துள்ளது. தனியார் அமைப்பொன்று இந்த யோசனையை தங்களிடம் முன்வைத்தது எனத் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 26பேர் மீண்டனர்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த 26 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  இதுவரை1498 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் நாட்டில் 1950பேர் கொரோனா ...

மேலும்..

மீண்டும் மன்னாரில் இந்து மதஸ்தலங்கள் மீது தாக்குதல்

மன்னார்- யாழ்.பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம், இனம் தெரியாத சந்தேகநபர்களினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை  சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சிற்றாலயத்தில் காணப்பட்ட இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள், ஆலயத்தின் வாசல் பகுதியில் உடைக்கப்பட்டுள்ளதுடன் சில படங்கள் அருகிலுள்ள பற்றைகாடுகளுக்குள் ...

மேலும்..