இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு: இருவர் காயம் – ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – இருபாலை மடத்தடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மடத்தடிப்பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மரணச்சடங்கில், இரு தரப்புக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ...

மேலும்..

அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர். பரிசோதனைகளுக்கு ...

மேலும்..

2 நாட்களுக்குப் பின்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் கடந்த 2 நாட்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,951 ஆக அதிகரித்துள்ளது. மாலைதீவிலிருந்து வந்த ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்டதாக ...

மேலும்..

உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது – ஜனாதிபதி

நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளதால், உள்நாட்டில் பல துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் மக்கள்மயப்பட்ட பொருளாதாரத்திற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது என்றும் உள்நாட்டு மற்றும் ...

மேலும்..

தமிழர்களின் பிரதிநிதிகள் தமிழ்க் கூட்டமைப்பினரே!! மாற்று அணியினரைத் தோற்கடிப்போம்; வடமராட்சி கிழக்கில் சுமந்திரன் சூளுரை 

 "வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே. அதற்கான ஆணையை இம்முறையும் மேலும் வலுவுள்ளதாக வழங்குங்கள்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்கில் வத்திராயன், உடுத்துறை, ...

மேலும்..

வடககு – கிழக்கு தமிழர் தாயகம்! மாற்றுக் கருத்துக்கு இடமில்லை! அடித்துக் கூறுகிறார் சம்பந்தன்

"நாட்டில் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வுக்கான பணிகளையும் குழப்பியடித்து முழு நாடும் பௌத்த - சிங்கள தேசம் என்ற நினைப்பில் தெற்கு இனவாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அவர்களின் வாய்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு அடக்க வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் ...

மேலும்..

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் குழு அமர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நடத்த அவதானம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் சூழ்நிலையில் சமூக இடைவெளி பற்றிய வழிகாட்டல்கள் தொடர்ந்தால் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் குழு அமர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இயலுமை மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளைக் கண்டறிந்து கொள்வதற்கான ஒத்திகை அமர்வொன்று நாடாளுமன்றகுழு அறையில் இடம்பெற்றது. நாடாளுமன்ற செயலாளர் ...

மேலும்..

யுத்தத்தால் நலிவடைந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு தயார் – ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்

இலங்கையில் யுத்தத்தால் நலிவடைந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், மக்களின் நல்லிணக்கம் சார்ந்த இணக்கப்பாட்டு வேலைத் திட்டங்களையும்  மேற்கொள்ள தாம் எப்போதும் தயாராக உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவர் டெனிஸ் சைபி  தெரிவித்தார். வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை கிராமத்தில் ஐரோப்பிய ...

மேலும்..

சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது பயன்படுத்தாது இன்று மாயகண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை – தவராசா குற்றச்சாட்டு

சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது பயன்படுத்தாது அசமந்தப் போக்காக இருந்துவிட்டு இன்று மாயகண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். வடக்கின் தொல்பொருள் மற்றும் புராதன சின்னங்களை காப்பாற்றத் தவறியது வடக்கு மாகாணசபையே என்றும் ...

மேலும்..

எனக்கும் பிள்ளையானுக்கும்தான் போட்டி- ஹிஸ்புல்லாஹ்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எனக்கும் பிள்ளையானுக்கும்தான் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) போட்டி நிலவுகின்றதென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். பொதுத்தேரதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஹிஸ்புல்லாஹ் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் ...

மேலும்..

சட்டத்தை மீறுபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவர் – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் வேட்பாளர் விருப்ப இலக்கம் என்பவற்றினை காட்சிப்படுத்துபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ...

மேலும்..

அரசாங்கம் நல்லிணக்கத்தை காட்டுவதாயின் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – சிவாஜி

15 வருடங்களுக்கும் மேல் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதே, அரசாங்கத்தின் முதலாவது நல்லிணக்க சமிஞ்சையாக அமையும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் ...

மேலும்..

பாதாள உலகக் கும்பலின் முக்கிய உறுப்பினர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது: STF தொடர் விசாரணை

பாதாள உலகக் கும்பலின் முக்கிய உறுப்பினரான இந்தூனில் குமார உட்பட மூன்று சந்தேகநபர்கள், கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதாள உலகக் கும்பலின் உறுப்பினர்களைத் தேடி இராணுவத்தின் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப் ) இன்று (திங்கட்கிழமை)  விசேட சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டது. இதன்போது, ...

மேலும்..

இலங்கையில் இதுவரை 95,087 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு

இலங்கையில் இதுவரையில் 95,087 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 20ஆம் திகதியன்று 827 PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாவும் அதன்போது எந்தவொரு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. நாட்டில் அடையாளங்காணப்பட்டட கொரோனா ...

மேலும்..

வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் தகவல் தொழில்நுட்பத்தில் சித்தி அடைய வேண்டும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள கல்வி முறையில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே பயிலும் பட்டதாரிகள் தொழில் வாய்ப்பை பெறுவதென்பது இலகுவான காரியமல்ல என தெரிவித்துள்ள ...

மேலும்..