இலங்கை செய்திகள்

கிங் கங்கையில் மூழ்கி 13 வயது சிறுவன் சாவு…

காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிங் கங்கையில் நீராடச் சென்ற 13 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீஎல்ல, ஹக்மண பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். ஆபத்தான நிலையில் குறித்த சிறுவன் கராப்பிட்டி வைத்தியசாலையின் அவசர ...

மேலும்..

பதிவு செய்யப்பட்ட இடங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி…

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் மாத்திரமே தங்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு ...

மேலும்..

கொரோனா தொற்று ஏற்படாத மாவட்டங்களுக்கு தேர்தல் பிரச்சாரங்களை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதி அளிக்கவேண்டும்!..

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத மாவட்டங்களுக்கு தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு சுகாதார நடைமுறையில் தளர்வு நிலை வேண்டும்,சுதந்திரமாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள அனுமதி வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி ...

மேலும்..

புஸ்ஸல்லாவையில் இரண்டு சிறுத்தைப்புலிகள் மீட்பு…

(க.கிஷாந்தன்)   புஸல்லாவை, எல்பொட தோட்டத்தில் இன்று (23.06.2020)  காலை இரண்டு சிறுத்தைப்புலிகள் மீட்கப்பட்டுள்ளன என்று வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். வேட்டைப் பொறியில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட  சிறுத்தைப் புலிகளுள் ஒன்று உயிரிழந்துவிட்டதாகவும், மற்றையது மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 6 ...

மேலும்..

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு…

(க.கிஷாந்தன்) கொழும்பு - பதுளை பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் அம்பேவெல – பட்டிப்பொல ஆகிய புகையிரத நிலையத்திற்கு இடையில், 23.06.2020 அன்று மதியம் 1.30 மணியளவில் ஏற்பட்ட புகையிரத தடம் புரள்வு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை புகையிரதம் நிலையம் ...

மேலும்..

உகந்தமலை முருகன் ஆலய கொடியேற்ற பக்தர்களின் வருகை தொடர்பான தீர்மானம் வெளியீடு…

கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க உகந்தமலை முருகன் ஆலய கொடியேற்ற பக்தர்களின் வருகை தொடர்பான நிகழ்வுக்கான ஒன்றுகூடலானது அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன் அவர்களின் தலைமையில் 22/06/2020 காலை 10.00 மணியளவில் லகுகல பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. இன் ...

மேலும்..

தமிழர் பாரம்பரியம் திட்டமிட்ட அழிப்பு: முறியடிக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு! விசனத்துடன் தெரிவிக்கிறார் மாவை

பாரம்பரியம் மிக்க தமிழர் வரலாற்றை மாற்றியமைக்கும் நோக்கில் அரசாங்கம் விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எனவே இவ்விவகாரத்தில் தலையிட்டு எமக்கு உதவவேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ...

மேலும்..

கூட்டமைப்பின் முடிவுகள் மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் – சார்ள்ஸ்

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 22 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கடந்த இரு நாட்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் ...

மேலும்..

மதத் தலைவரை அவமதிப்பது வீழ்ச்சியின் ஆரம்பம்- மஹிந்த

எந்ததொரு மதத்தையோ அல்லது மதத் தலைவரையோ அவமதிப்பது  வீழச்சியின் ஆரம்பம் என பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற  மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தயார் – பிரதமர் மஹிந்த

நாடு பிளவுபடாமல் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்க எமது அரசாங்கம் தயாராக உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வடக்கு கிழக்கில் நீண்ட காலம் ...

மேலும்..

அரசாங்கம் கணிசமான எந்த சலுகையும் மக்களுக்கு வழங்கவில்லை – பொன்சேகா

புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டு பல மாதங்கள் நிறைவடைந்த போதிலும் மக்களுக்கு எந்த சலுகையும் இதுவரை கிடைக்கவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் முக்கிய வேலைகளை செய்ததாக சுட்டிக்காட்டிய அவர் இந்த ...

மேலும்..

கடன் அட்டை மோசடி: 3 நைஜீரிய நாட்டுப் பிரஜைகளும் உகண்டாவைச் சேர்ந்த பெண்ணொருவரும் கைது

சர்வதேச கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று நைஜீரிய நாட்டுப் பிரஜைகளும் உகண்டாவைச் சேர்ந்த பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிசைப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை அதிரடிப்படையினர்  முன்னெடுத்திருந்தனர் இதன்போது, கல்கிசையிலுள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் வைத்தே, குறித்த சந்தேகநபர்களை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ...

மேலும்..

மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் கடந்த காலங்களை விட சற்று குறைந்து வருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி வி. குணராஜசேகரம்  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை)  ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பு – 47 ஆயிரத்து 430 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பில் 47 ஆயிரத்து 430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பிற்கு 7 இலட்சத்து 53 ஆயிரத்து 37 விண்ணப்பங்கள் கிடைத்தபோதும் அதில் 7 இலட்சத்து 50 ...

மேலும்..