இலங்கை செய்திகள்

நாட்டில் கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்த விலைசூத்திரம் தேவை! அரசாங்க நிதி பற்றிய குழு ஆலோசனை

இலங்கையிலுள்ள களஞ்சியங்களில் தற்பொழுது காணப்படும் கோதுமை மாவின் அளவு தொடர்பில் தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொண்டு இவ்விடயம் குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கணக்காய்வாளர் நாயகத்தின் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கினார். கோதுமை மாவுக்கு விலைச்சூத்திரமொன்றைப் ...

மேலும்..

பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் இராஜினாமா

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதம் இன்று புதன்கிழமை (04) மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்  கஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 14 மாதங்களுக்கு முன்னர் மிகவும் ...

மேலும்..

வவுனியா செட்டிகுளம் பகுதியில் ஆலயத்தில் சிலைகள் விசமிகளால் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்தெடுப்பு

வவுனியா செட்டிக்குளம் வீரபும்  பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சிலைகள் விசமிகளால் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நவக்கிரக விக்கிரகங்கள் மற்றும் வைரவர், முருகன், அம்மன் விக்கிரகங்கள் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை  (04) காலை ஆலயத்திற்கு பூஜைக்காக ...

மேலும்..

வடக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

வட மாகாண ஆளுநர்  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லேவை கொழும்பில் அமைந்துள்ள இந்தியா இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பின் போது  ஆளுநர் வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். அதேவேளையில் இந்திய அரசாங்கம் ...

மேலும்..

மதங்களுக்கிடையிலான உரிமை மறுப்பை தட்டிக்கேட்கும் உரிமைகள் ஏனைய நாடுகளின் எம்.பிக்கும் உள்ளதாம்! சாணக்கியன் வலியுறுத்து

கடந்த சில நாட்களாக மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் சர்வதேச குழுவினால் (IPPFORB - The International Panel of Parliamentarians for Freedom of Religion or Belief) நடத்தப்படும் செயல்திட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற ...

மேலும்..

களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் தமது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை(04.10.2023) களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னால் தமது முச்சக்கர வண்டிகளைக் கொணர்ந்து பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ...

மேலும்..

பொலிஸ் சார்ஜன்டின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபைர் வேண்டுகோள்

பொலன்னறுவை - வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் தங்கும் விடுதியில் இருந்து இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்டின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டுமென வலியுறுத்துவாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார். வெலிக்கந்தைப் பொலிஸ் நிலையத்தில் ...

மேலும்..

அஜித் நிவார்ட் கப்ரால், லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பிரஜைக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ...

மேலும்..

நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றல்

  உலக நீர் வெறுப்பு நோய் தினம் செப்ரெம்பர் 28 ஆகும். இதனையொட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை க்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தொற்று நோய் பிரிவு மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் இணைந்து நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் ...

மேலும்..

நாட்டின் பொருளாதார நிலைமையால் இளைஞர்கள் வெளிநாட்டு வேலைகளை நோக்கி நகர ஆரம்பிப்பு! சர்வதேச மாநாட்டில் எஸ்.எம். சபீஸ் கருத்து

  நூருல் ஹூதா உமர் இளைஞர், யுவதிகளின் பங்குபற்றலுடன் எமது உலகை சமாதானம் நிறைந்த சூழலாக வடிவமைத்துக் கொள்வதற்கான ஒண்றிணைந்த முயற்சியில் நாங்கள் இங்கு குழுமியிருயிருக்கின்றோம். முழு உலகமும் சமமான கட்டமைப்பு, மனித உரிமைக்கான மரியாதை மற்றும் பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வுமிக்க சூழலைக் கொண்ட ...

மேலும்..

அரச பொதுச் சேவைகள்சங்க கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன!

  நூருல் ஹூதா உமர் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை, விலைவாசி அதிகரிப்பு அதனைத் தொடர்ந்து வந்துள்ள அரசியல் நெருக்குவாரங்களுக்கு மத்தியில் அரச சேவை தொழில் உரிமை, பாதுகாப்பு, கௌரவம் என்பனவற்றை இழந்த நிலையில் இன்று ஆட்டம் கண்டுள்ளது. தொழில் வல்லுநர்கள், நிபுணத்துவ ...

மேலும்..

கொக்குத்தொடுவாயிலும் நீதிபதியை அச்சுறுத்தி உண்மைகளை மூடிமறைக்க அரசதரப்பு முயலுமா? ரவிகரன் அச்சம்

நீதிபதி சரவணராஜாவிற்கு குருந்தூர்மலை விவகாரத்தில் அரசதரப்பால் அரசியல் ரீதியாகப் பிரையோகிக்கப்பட்ட மன அழுத்தம் மற்றும், உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் தனது பதவியைத் துறந்து இந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ள இத்தகைய சூழலில், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்திலும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் ...

மேலும்..

யாழில் சமிந்தவாஸ் தலைமையில் பயிற்சி முகாம்

யாழ்ப்பாணத்தில் இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் துடுப்பாட்ட பயிற்சி முகாமொன்று நடத்தப்படவுள்ளதாக ஜெப்னா ஸ்ரான்லியன்ஸ் இயக்குனர் க. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”துடுப்பாட்டத்தில் திறமையானவர்களை கண்டறிவதற்கான பயிற்சி முகாமொன்று யாழ்ப்பாணம் ...

மேலும்..

200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் சரிந்ததால் மின்சாரம் தடை

யாழ்.சாவகச்சேரி நகரிலிருந்த 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று இன்று திடீரென மின்சாரக் கம்பங்கள் மீது வீழ்ந்ததில் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பகுதியில் இருந்த பெட்டிக்கடையொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இதன்போது சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

ரயிலுடன் ஓட்டோ மோதியது

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலுடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏறாவூர் ஜின்னா வீதி புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டியே இவ்வாறு மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கி சென்ற ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர் ...

மேலும்..