இலங்கை செய்திகள்

தமிழகக் கடல் தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியவில்லை என டக்ளஸ் கைவிரிப்பு!

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக தாம் முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சரின் ...

மேலும்..

வெளிநாட்டு தொண்டு அமைப்புக்கு ஒதுக்கிய காணியை அரச நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்ககோரி போராட்டம்!

  பொதுத் தேவைக்கு ஒதுக்கிவிட்டு நிறுவனங்களிற்கு காணி பகிர்ந்தளிக்கக் கோரி மக்கள் போராட்டம் ஒன்றை புதன்கிழமை முன்னெடுத்தனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராமத்தின் வேதா குடியிருப்பு பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு காணி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காணி, பொதுச்சந்தை, விளையாட்டு மைதானம் ...

மேலும்..

யாழ்.மாவட்டத்தில் புதிய மதுபானசாலை அமைக்க அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கை நிராகரிப்பு! யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம்

  யாழ். மாவட்டத்தில் புதிதாக எந்த ஒரு மதுபானசாலையையும் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் தீர்மானம் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்த போதிலும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்படி கோரிக்கை ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உலக சுற்றுலா தினம் முன்னெடுப்பு

  உலக சுற்றுலா தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சிறப்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதனையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா ...

மேலும்..

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை ஐ.தே.க. பொதுச் செயலாளர் ரங்கே பண்டார கூறுகிறார்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விசாரணையை மேற்கொள்ள உள்நாட்டில் சிறந்த விசாரணை அதிகாரிகள் இருக்கும்போது அதனை சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்லத் தேவையில்லை. குண்டுத்தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே ...

மேலும்..

அமெரிக்கா ஓரவஞ்சனையாக செயற்படுகிறது – சரத் வீரசேகர விசனம்

அமெரிக்க தூதரகத்தினால் தனக்கு வீசா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளமையானது அமெரிக்காவின் ஓரவஞ்சனை செயற்பாடு என விசனம் வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, இலங்கையில் ஒரு குறிப்பிட்ட குழுவினரை இலக்கு வைத்து அமெரிக்கா இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் அரசாங்கம் அவதானம் ...

மேலும்..

இலங்கையில் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெருமளவானவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உளர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு

  இலங்கையில் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெருமளவானவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தே செயற்படுகின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அவர்களை இலங்கைக்கு கொண்டுவந்து சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ...

மேலும்..

காத்தான்குடியில் பட்டப் பகல்வேளை வீட்டை உடைத்து திருடியவர் கைது!

  பட்டப் பகலில் வீட்டை உடைத்து 28 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத் தாலியை திருடிய 26 வயது நபரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ். ஏ. ரஹீம் தெரிவித்தார். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி ...

மேலும்..

வருடத்துக்கு 500 பில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் ; நாணய நிதியம் கவலை வெளியிடுட்டுள்ளதாக மஹிந்தானந்த தெரிவிப்பு

தேசிய வருமான வரி திணைக்களம், சுங்க திணைக்களம், மதுவரித்திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து இவ்வாண்டு எதிர்பார்க்கப்படும் வரி வருமானத்தைப் பெற முடியாத நிலைமை காணப்படுகின்றமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியதம் கவலை வெளியிட்டுள்ளது. எனவே இவற்றில் இடம்பெறும் ஊழல், மோசடிகளை இல்லாதொழித்து எதிர்பார்க்கப்படும் வருமானத்தை ஈட்டும் ...

மேலும்..

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய மக்களின் மனநிலை மாற வேண்டும் – சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்

உள்நாட்டு உணவு கலாசாரம் இன்னும் சுற்றுலாத்துறைக்கு அறிமுகப்படுத்தாமல் இருக்கிறது. இதனை அறிமுகப்படுத்தாதவரை சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முடியாது. அத்துடன், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய எமது மனநிலை மாறவேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு ...

மேலும்..

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 5 வருட சிறைதண்டனை

சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ...

மேலும்..

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர் சுற்றிவளைப்பில் பலருக்கு நடவடிக்கை!

திருகோணமலையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிண்ணியா கச்சக்கொடித்தீவு பகுதியில் உள்ள கடை ஒன்றில் விலை பட்டியல் காட்சிப்படுதாமல் விற்பனைக்காக பதுக்கி வைத்த 50 கிலோகிராம் கீரிச்சம்பா அரிசி கைப்பற்றப்பட்டது. குறித்த சுற்றிவளைப்பு திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. மேலும், திருகோணமலை நகரில் விலைப்பட்டியலின்றி ...

மேலும்..

போரில் உயிரிழந்தோருக்கு பொது நினைவுச் சின்னம்! தமிழினம் அனுமதிக்காது என்கிறார் ஐங்கரநேசன்

ஜனாதிபதிச் செயலகம் போரில் இறந்த இராணுவத்தினர், விடுதலைப் போராளிகள், பொதுமக்கள் ஆகிய முத்தரப்பினருக்கும் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதாக முடிவெடுத்து அதனை விரைவில் நிறுவுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக அரசதரப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு யாழ். மாவட்ட செயலகத்தில் கடந்த சனிக்கிழமை ...

மேலும்..

இலங்கையில் சினோபெக் நிறுவன விநியோக செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை  கொழும்பு, ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கைக்கான சீனத்தூதுவர் சீ சென்ஹொங் மற்றும் சினோபெக் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யாங் ஜுன்ஸ் ஆகியோர் ...

மேலும்..

கருத்துச் சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்து

கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் என்பவற்றின் அவசியம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் ...

மேலும்..