இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கி இளைஞர் பலி..

யாழ் – தெல்லிப்பளை, அம்பனை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த 34 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். அம்பனையிலுள்ள தமது தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவு கொண்டு சென்ற வேளையிலேயே இளைஞர் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார். நேற்று காலை ...

மேலும்..

விவசாயத்துறை வீழ்ச்சியடைவதற்கான சாத்தியம்..

விவசாய ஆலோசகர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விதை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாய ஆலோசகர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய ஆலோசகர்கள் கடந்த மே மாதம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு ...

மேலும்..

மசகு எண்ணெய் இறக்குமதியில் பாரிய மோசடி.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்ததில் ஒரு கப்பலில் இருந்து மாத்திரம் 100 மில்லியன் டொலர்கள் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார். இந்த பாரிய பொதுப் பண ...

மேலும்..

எம்.பிக்கள் தொடர்பில் பேஸ்புக்கில் அவதூறு பரப்பினால் இரண்டு வருட சிறை..

சமூக ஊடகமான ஃபேஸ்புக் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபரொருவர் அது தொடர்பில் தனது கவலையை வெளியிட்டு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்புக் கோரினார். பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தொடர்பில் அவதூறான வகையில் வெளியிட்ட காணொளியின் ஊடாக ...

மேலும்..

கொதிநீர் பீப்பாயில் வீழ்ந்து கைதி உயிரிழப்பு..

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கொதிநீர் பீப்பாய் ஒன்றில் வீழ்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொதிநீர் பீப்பாயில் வீழ்ந்தமையினால் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் மற்றும் ...

மேலும்..

சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு – சிறிலங்கா அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் பிரதான கடன் வழங்குநர்களில் ஒன்றான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக சிறிலங்கா  அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் பின்னரான பேச்சுவார்த்தையில் அடுத்த ...

மேலும்..

எரிபொருள் நிரப்ப வந்தவருக்கு ஏற்பட்ட நிலை! தீக்கு இரையாகிய உந்துருளி

வவுனியா ஹொரவபொத்தானை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த உந்துருளி ஒன்று திடீரென தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வருகை தந்த நபர் உந்துருளியை நிறுத்திவிட்டு எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்த நிலையில் ...

மேலும்..

சர்வதேசத்தின் பிடியில் வலுவாக சிக்கிக்கொண்டது சிறிலங்கா – சற்று முன்னர் நிறைவேறியது வாக்கெடுப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானம் இன்று 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 20 உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த வாக்கெடுப்பில் இந்தியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்ளாமை சர்வதேச ...

மேலும்..

பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணத்தை மோசடி செய்த பெண்..!

கொழும்பில் பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணம் மற்றும் தங்க நகைகளை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்தனர். கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்திவந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக ...

மேலும்..

ஏழைக்குடும்பங்களுக்கான அரசின் நலத்திட்டம் ஆரம்பம்;3.1மில்லியன் மக்களுக்கு நன்மை.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஆபத்துப் பிரிவில் உள்ள குடும்பங்கள் மற்றும் தனி நபர்களுக்கான நலத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி 3.1 மில்லியன் மக்களுக்கு நன்மைகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ...

மேலும்..

பிரிகேடியர் ரவி ஹேரத்புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப்பேச்சாளராககடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.,

இலங்கை சமிக்ஞைப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ரவி ஹேரத் இன்று(6) காலை இராணுவத் தலைமையகத்தில் 19ஆவது புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப் பேச்சாளராக, மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் தனது அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும்..

அதிகரிக்கப்போகும் எரிபொருளின் விலை! நாடாளுமன்றில் ரணில் அறிவிப்பு..

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பொன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (06.10.2022) ஆற்றிய விசேட உரையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது, உலகளாவிய தாக்கம் காரணமாக எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் ...

மேலும்..

15 வயது சிறுமி வன்புணர்வு..! 64 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை..

15 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 64 வயதுடைய நபருக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. மாத்தளை வேவல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மே 5, 2008 அன்று, சந்தேக நபரின் வீட்டில் சிறுமியை கூரிய ...

மேலும்..

ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி நடவடிக்கை! விசேட வர்த்தமானி வெளியீடு..

ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை ஆகியன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆட்பதிவுத் திணைக்களம், ...

மேலும்..

தோற்கடிக்க முடியாத பிரேரணை – திக்திக் நிமிடங்களை நோக்கி நகரும் சிறிலங்கா!

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொடர்பான பொருத்தமான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா உள்ளிட்ட பல நாடுகளின் முன்முயற்சியில் ...

மேலும்..