July 30, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தெருவால் போகின்றவர்களின் கருத்தை முஸ்லிம்களின் கருத்தாக கருணா தூக்கிப்பிடிப்பது ஏன்…

தெருவால் போகின்றவர்களின் கருத்தை முஸ்லிம்களின் கருத்தாக கருணா தூக்கிப்பிடிப்பது ஏன் ? இராமன் நபியென்றும், இராவணன் முஸ்லிமென்றும் கூறியதன் மூலம் கருணா அம்மானுக்கு அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கான களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தினை கூறிய முஸ்லிம் பெயர்தாங்கியை ஒருபோதும் முஸ்லிம் மக்கள் ...

மேலும்..

“இருப்பு, ஒற்றுமை பற்றி வாய்கிழியப் பேசுவோர், சமூகப் பிரதிநிதித்துவங்களை ஒழிக்க முயற்சி” – ஓட்டமாவடியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்…

இருப்பு, ஒற்றுமை தொடர்பில் வாய்கிழியப் பேசிக்கொண்டிருப்போர், கல்குடாவின் சமூகப் பிரதிநிதித்துவத்தை எப்படியாவது இல்லாமலாக்கிவிட வேண்டுமென்ற திட்டத்துடன் செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலியை ஆதரித்து, நேற்று ...

மேலும்..

2ஆம் நிலை காவலர் தேர்வில் தேர்வானவர்களின் கோரிக்கையை ஏற்று பற்றாக்குறையாக உள்ள பணியிடங்களில் அவர்களைப் பணியமர்த்த வேண்டும் – எம்.எல்.ஏ.,கருணாஸ் கோரிக்கை…

2ஆம் நிலை காவலர் தேர்வில் தேர்வானவர்களின் கோரிக்கையை ஏற்று பற்றாக்குறையாக உள்ள பணியிடங்களில் அவர்களைப்  பணியமர்த்த வேண்டும்  எம்.எல்.ஏ., கருணாஸ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடந்த ஆண்டு 2019 இல் நடந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்வானவர்களை நியமிக்க வேண்டும். கடந்த 2019இல் இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு உள்ளிட்டவைகளில் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் இறுதியாக அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் 8,538 காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப காவலர்கள் நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணி நியமனமும் வழங்கப்பட்டது. தமிழகத்தில் காவலர் பற்றாக்குறை அதிகம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு 2020ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  அதை கருத்தில் கொண்டும், தற்போதைய  சூழ்நிலையில் காவலர் எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. 2019-20 இல் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தகுதிச் சுற்றுகளில் தேர்ச்சி பெற்றவர்களை தற்போது அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ...

மேலும்..

பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால் இறுதியில் சர்வதேசம் தலையிடும்…

இதுதான் உ ண்மை. சர்வதேச நாடுகளின் ஆதரவுடன்தான் இலங்கையில் அரசியல் மாற்றங்களைக் கொண்டு வரலாம். இதிலும் இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரொப்பிய ஒன்றியம், கனடா போன்ற நாடுகளின் ஆதரவு மிக மிக முக்யிம். இந்த நாடுகளே ஐநாமஉ பேரவையில் சிறிலங்கா ...

மேலும்..

ஜனநாயகமானதும்- நீதியானதுமான வன்முறையற்ற தூய தேர்தல் கலாச்சாரத்தைப் பேணுவோம்- அம்பாரை மாவட்ட பிரதேச நல்லிணக்க மன்றங்கள் கோரிக்கை…

எதிர்வரும் 2020 ஓகஸ்ட் மாதம் 05ம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலானது வன்முறையற்றதும் அமைதியானதும் சுதந்திரமானதும் நல்லிணக்கத்தினை உருவாக்க கூடியதுமான தேர்தலாக நடைபெற அரசியல் கட்சிகளிடமும் சுயேட்சைக் குழுக்களிடமும், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களிடமும் பின்வரும் விடயங்களில் ஒத்துழைப்பை கோருவதென சமாதானமும் சமூகப் ...

மேலும்..

காலம் தொடர்ந்தும் வாய்ப்பு தராது இரா. சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்க.

காலம் தொடர்ந்தும் வாய்ப்பு தராது இரா. சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யுமாறு திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருகோணமலையில் இன்று(30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ...

மேலும்..

சர்வதேசத்துடன் சவால் விட்டால் அழிவுதான் பரிசாகக் கிடைக்கும் – ராஜபக்சக்களுக்கு ரணில் கடும் எச்சரிக்கை…

"சர்வதேசத்தைப் பகைத்துக்கொண்டு நாம் எதனையும் செய்ய முடியாது. உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால் இறுதியில் சர்வதேசம்தான் தலையிடும். அது உலக நியதி. எனவே, சர்வதேசத்துடன் ராஜபக்ச அரசு சவால் விட்டால் நாட்டுக்கு அழிவுதான் பரிசாகக் கிடைக்கும்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ...

மேலும்..

இரட்டை வேடம் போடும் வேடதாரிகளை வாக்களிப்பு மூலம் நாம் விரட்டியடிக்க வேண்டும் – அரவிந்தகுமார் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலானது தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தலாகும். எமது இருப்பும் இத்தேர்தல்மூலமே தீர்மானிக்கப்படும். எனவே, ஓரணியில் திரண்டு ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு கோருகின்றேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட ...

மேலும்..

தமிழ் வாக்குகளை சிதறடித்து பதுளை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கான சதித்திட்டம் முன்னெடுப்பு – வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) தமிழ் வாக்குகளை சிதறடித்து பதுளை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பதுளை லுணுகலை பிரதேசத்தில் 30.07.2020 அன்று மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தே இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றன. பதுளை மாவட்டத்தில் அண்ணன் அரவிந்தகுமாரும், நானும் ஓருயிர் ஈருடல்போல இணைந்து களமிறங்கியுள்ளோம். எமக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தென்படுகின்றது. இன்று இந்த நாட்டிலே இனவாதம் தலைதூக்கியுள்ளது.  சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே, எமது அரசியல் இருப்பை நாம் கட்டாயம் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். ஆனால், பதுளை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு பாரிய சதித்திட்டம் நடந்துக்கொண்டிருக்கின்றது. திட்டமிட்ட அடிப்படையில் சமூகவலைத்தளங்களில் சேறுபூசப்பட்டுவருகின்றது. தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல சுயேட்சைக்குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பான்மையினத்தவர்கள் சரியான முறையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.  தமிழ் இளைஞர், யுவதிகளை தவறாக வழிநடத்தி ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு பதுளை மாவட்ட தமிழர்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கான சதிகள் நடக்கின்றன. எனினும், எமது மக்கள் தெளிவாகவே இருக்கின்றனர். எமக்கே வாக்களிப்பார்கள். பொதுத்தேர்தலில் நாமே வெற்றிபெறுவோம்." - என்றார்.

மேலும்..

10 ஆயிரம் இலங்கையர் வேலை இழப்பு; நிர்க்கதியானோரை அழைத்துவர முடிவு…

மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளிலுள்ள இலங்கையர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கள ரன்தெனிய தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட முடக்க ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பு கோட்டா அரசாங்கத்துடன் இணைந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கே முயற்சி செய்கின்றது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு கோட்டா அரசாங்கத்துடன் இணைந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கே முயற்சி செய்கின்றது. இது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம். இதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வவுனியா ...

மேலும்..

வடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா மகிந்தவிற்கு சிறிதரன் சவால்…

வடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா என மகிந்தவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் சிறிதரன் சவால்  விடுத்துள்ளார் நேற்றைய தினம் உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ...

மேலும்..

திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 42 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு…

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 42 ஆவது தலைவராக சுரேஷ் சுப்ரமணியம்     அவர்கள் பதவி ஏற்க்கும் நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில் 26.07.2020 - ஞாயிற்று கிழமை அன்று இடம் பெற்றது. இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் ஆ. உதயராஜன் , கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார். அவரது காலத்தில், திருகோணமலை ரோட்டரி கிளப் சிறப்பாக செயல் பட்டதாகவும் அதட்கு உதவிய தனது குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறி கௌரவித்தார். செயலாளர் அரு கிருபாகரன் 2019=2020  ஆண்டில்  திருகோணமலை ரோட்டரி   கழக  நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு வே. மகேந்திரராஜா- சிரேஷ்ட பணிப்பாளர் - நிதியியல் ஆணைக்குழு கலந்து கொண்டார். இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் ஆ. உதயராஜன்  புதிதாக தெரிவான தலைவர் சுரேஷ் சுப்ரமணியத்துக்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.. புதிய அங்கத்தவர்களாக   திரு க பிரபாகரன் - பிராந்திய முகாமையாளர் மத்திய வங்கி கிழக்கு மாகாணம் மற்றும் திருமதி குமுதினி ஜெய ஜோகரட்ணம் - உதவி பொது முகாமையாளர் , இலங்கை வங்கி , கிழக்கு மாகாணம்   அவர்களும்   இணைத்துக் கொள்ளப்படார்கள். இவ் வைபவத்தில்ஊடகவியலாளர் திரு சசிகுமார் அவர்களும் கௌரவிக்கப் படடார்.  பிரதம விருந்தினர் திரு வே. மகேந்திரராஜா அவரது உரையில் றோட்டரிக் கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவை புரிவதாக பாராட்டினார். இலங்கை நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை குறிப்பிட்டு, ...

மேலும்..

விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் | ரொறன்ரோ நகரமும் பீல் பிராந்தியமும் மூன்றாம் கட்டத்துக்கு நகர்கின்றன…

ஒன்ராறியோ சுகாதார தலைமை அதிகாரியுடன் எமது அரசாங்கம் மேற்கொண்ட ஆலோசனைக்கிணங்க, எதிர்வரும் வெள்ளிக்கிழமை, ஜூலை 31ஆம் திகதியன்று, ரொறன்ரோ நகரமும் பீல் பிராந்தியமும் மூன்றாம் கட்டத்துக்கு நகர்வதென முடிவெடுக்கப்பட்டுள்து. ஒன்ராறியோ மானிலத்தில் மேலும் பல வணிக மற்றும் பொது இடங்களைத் திறந்து வைக்கும் மேற்படி முடிவானது, இப்பகுதிகளின் சுகாதார தரவுகளின்படி குறைவான நோய்ப்பரம்பல், நோய்த்தொற்றை சமாளிக்க போதியளவு வைத்தியசாலை மற்றும் சுகாதார வசதிகள், அதிகரிக்கப்பட்டுள்ள மருத்துவ சோதனைகள் போன்றவற்றை அடிப்படையாக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீளத் திறந்து வைப்பதன் மூன்றாம் கட்ட விதிமுறைகளின்படி, அடுத்த கட்டத்துக்குள் நகரும் ஒன்ராறியோவின் பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடும்போது கடைப்பிடிக்க வேண்டியவை பின்வருமாறு அமையும்: உள்ளக ஒன்றுகூடல்களின்போதான வரையறை அதிகப்படியாக 50 பேர் வரை அதிகரிக்கப்படுகிறது. வெளியரங்க ஒன்றுகூடல்களின்போதான வரையறை அதிகப்படியாக 100 பேர் வரை அதிகரிக்கப்படுகிறது. ஒன்றுகூடுபவர்களின் எண்ணிக்கை தனிமனித இடைவெளி விதிமுறைக்ளுக்கு அமைவாக இருத்தல் வேண்டும். விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர்.

மேலும்..

அடுத்த10 ஆண்டுகள் கோட்டாபய தசாப்தமாகும் – காலாவதியான அரசியல் வாதிகளை பாராளுமன்றம் அனுப்பாமல், சிறப்பாக செயற்படக்கூடியவர்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன் – விமல் வீரவன்ச தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) " அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டாபய ராஜபக்ச தசாப்தமாகும். எனவே, அவருடன் இணைந்து பணியாற்றக்கூடிய காலாவதியாகாத - பொருத்தமான உறுப்பினர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பவேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் நிமல் பியதிஸ்ஸ முதலிடம் பிடிப்பார். மாவட்டத்தையும் கைப்பற்றுவோம்." - என்று தேசிய சுதந்திர ...

மேலும்..

ஒருசாராரைப் பலவீனப்படுத்தி, காரியத்தைச் சாதிப்பதற்கு அரசாங்கம் முயல்கிறது – இரா.சாணக்கியன்…

ஒருசாராரைப் பலவீனப்படுத்தி, காரியத்தைச் சாதிப்பதற்கு அரசாங்கம் முயல்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில், சிங்களப் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டும் ...

மேலும்..