September 12, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசாவை கட்சியிலிருந்து நீக்கவேண்டுமென்று கோரியுள்ள ஆப்பிரஹாம் சுமந்திரன் தொடர்பாக .

திரு. சி.வி.கே; சிவஞானம் சிரேஸ்ட துணைத்தலைவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி நான் தமிழரசுக் கட்சியில் இணைந்து செயல்படுவது  தமிழ் தேசியத்தின் மீது நான் கொண்ட பற்றினால் மட்டுமே .  கடந்த பத்து ஆண்டுகளாக  கட்சியில் பல பதவிகள் எனக்கு வழங்கப்பட்டன  .   எந்தப் பதவிக்காகவோ அல்லது  ...

மேலும்..

கொரோனாவினால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய 4 ஆயிரம் அகதிகளுக்கு அனுமதி மறுப்பு!!!

ஆஸ்திரேலியா அரசு மீண்டும் அகதிகள் திட்டத்தின் கீழ் நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்க வேண்டும் என அகதிகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச எல்லைகளை மூடிய ஆஸ்திரேலிய அரசு வெளிநாட்டினர் ...

மேலும்..

அட்டன் செம்புவத்த தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்த ஜீவன் தொண்டமான்!

அட்டன் செம்புவத்த தோட்ட தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று (12.09.2020) நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பளப் பிரச்சினை,  கொழுந்து நிலுவை, வெளி ஆட்கள் தோட்ட வேலைக்குவருதல் உட்பட மேலும் சில ...

மேலும்..

வீதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் jaffnaமுதல்வர் பங்கேற்பு!

2020 ஆம் ஆண்டுக்கான வட்டார நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாநகரசபை 2ஆம் வட்டாரத்திற்குற்பட்ட பிறவுண் வீதி 5ஆம் ஒழுங்கை மற்றும் பிறவுண் வீதி மிருக வைத்தியசாலை ஒழுங்கை ஆகிய இரு உப வீதிகள் புனரமைப்பிற்காக மாநகரசபை உறுப்பினர் கௌரவ ப.தர்சானந்த் அவர்களின் ...

மேலும்..

ஐ.தே.க. தலைமையை ஏற்க மங்கள தயாரா?

"ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு யாராவது கேட்டால் இது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றே நான் பதிலளிப்பேன்." - இவ்வாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். தான் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் என்றும், இது எதிர்காலத்திலும் மாறாமல் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நான் ஐக்கிய தேசியக் கட்சியின் ...

மேலும்..

இன, மதவாதத்தை உருவாக்கி அமைதியைச் சீர்குலைக்காதீர் – விக்கியிடம் சஜித் அணி மீண்டும் வலியுறுத்து !!!

இனவாதம், மத வாதத்தை மக்களின் மனங்களில் உருவாக்கி அமைதியை இல்லாமல் செய்துவிட வேண்டாம் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று ...

மேலும்..

கல்முனை கிரீன்பீல்ட் பகுதியில் கொட்டப்படும் திண்மக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்கான பொறிமுறை வகுக்கப்படும்

கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்தொகுதிக்குப் பின்னால் அமைந்துள்ள பகுதியில் கொட்டப்பட்டிருந்த திண்மக்கழிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபையினால் முற்றாக அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இத்திண்மக்கழிவுகளினால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இக்கழிவுகளை நோக்கி யானைகள் படையெடுப்பதாகவும் இதனால் மக்கள் பல்வேறு ...

மேலும்..

ஜெனீவா நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இல்லை!!!

எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் இம்முறை இலங்கை ஒற்றையாட்சி அரசு பற்றிய விவகாரம் இல்லையெனத் தெரிய வருகின்றது. 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள கூட்டத் தொடர் ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெறுமென நிகழ்ச்சி ...

மேலும்..

மலையக மக்கள் முன்னணி போலி தகவல் பரப்பி வருகின்றனர் – மலையக ஆசிரியர் முன்னணியின் பொதுச்செயலாளர் தெரிவிப்பு!!

" எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு மலையக மக்கள் முன்னணி உரிய பதில்களை வழங்குவதில்லை. இதன்காரணமாக அவ்வமைப்புக்கான ஆதரவை கடந்தவருடமே விலக்கிக்கொண்டுவிட்டோம்.இந்நிலையில் எம்மை விலக்கிவிட்டதாக தற்போது போலி தகவல் பரப்பிவருகின்றனர்." - என்று மலையக ஆசிரியர் முன்னணியின் பொதுச்செயலாளர் சின்னையா ரவீந்திரன் தெரிவித்தார். நுவரெலியாவில் ...

மேலும்..

விற்பதற்காகக் கழுவிக் காயவைக்கப்பட்ட 3 ஆயிரத்து 128 முகக்கவசங்கள் சிக்கின!

கொழும்பு, கோட்டை நான்காம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டடமொன்றில் முகக்கவசங்கள் உலர வைக்கப்பட்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் மீண்டும் பயன்படுத்த முடியாத 3 ஆயிரத்து 128 முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புறக்கோட்டைப் பொலிஸாருடன் ...

மேலும்..

19 இலுள்ள தடைகளை நீக்கி முன்னோக்கி செல்வதே 20 ஆவது திருத்தத்தின் நோக்கம் – பிரேமலால் எம்.பி. விடயம் குறித்து கோட்டா விளக்கம்.

"அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகளைக் களைந்து முன்னோக்கிச் செல்வதே 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் நோக்கமாகும்." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். இதன் முதன்மையான நோக்கம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மாற்றாது எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் அகதிகளுக்கு ஹலால் உணவு மறுக்கப்படுகின்றதா?

ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக அங்கீகாரம் பெற்ற ஹலால் உணவை வழங்கப்படுவதில்லை என ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்திடம் முஸ்லீம் அகதிகளும் தஞ்சக்கோரிக்கையாளர்களும் முறையிட்டுள்ளனர். நவுரு மற்றும் பப்பு நியூ கினியாவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த ...

மேலும்..

20ஆவது திருத்தச் சட்டமூலம் 22இல் சபையில் முன்வைப்பு – நீதிமன்றத்தை நாட பல அமைப்புகள் முடிவு!!!

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது. அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழித்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வசம் அதிகாரங்களைக் குவிக்கும் விதத்திலான 20ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 20ஆவது ...

மேலும்..

டெங்கு நோய் அற்ற கிண்ணியா “விழிப்புணர்வு பணியில் பட்டதாரி பயிலுனர்களால் தீவிர டெங்கு வேட்டை!!!

கிண்ணியா பிரதேச பகுதியில் உள்ள இடங்களில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு இடம் பெற்றது. குறித்த விழிப்புணர்வானது கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி தலைமையில் இன்று (12)காலை பிரதேச செயலக வளாகத்தில் வைத்து தொடக்கி வைக்கப்பட்டது. புதிதாக நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் இதில் வீடு ...

மேலும்..

சர்வாதிகாரி போல் செயற்படும் தோட்டதுரையை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி ஹட்டனில் மக்கள் போராட்டம்!!!

சர்வாதிகாரிபோல் செயற்படும் தோட்டதுரையை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி அட்டன், செம்புவத்த தோட்ட தொழிலாளர்கள் (12.09.2020) அன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சம்பளத்தை குறைத்து, நிபந்தனைகளை விதித்து தொழிலாளர்களின் அடிவயிற்றில் அடிக்கும் துரையை வெளியேற்றும்வரை போராட்டம் தொடரும் எனவும் தோட்ட மக்கள் அறிவித்துள்ளனர். அட்டன் ...

மேலும்..

20க்கு திருத்தம் கேட்கும் எம்.பிக்களுக்கு ராஜபக்ஷவிடம் இருந்து சிக்கல்!!

20ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்தவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. பொதுஜன முன்னணியின் செயலாளரது கையெழுத்தில் பிரேம்நாத் தொலவத்தவுக்கு இதுகுறித்த கடிதமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆளுங்கட்சியின் கூட்டத் தொடர் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ...

மேலும்..

பூஸா சிறையில் 37 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் – கஞ்சிப்பானை இம்ரான் வைத்தியசாலையில்!!

காலி பூஸா சிறைச்சாலையில் தடுத்தது வைக்கப்பட்டுள்ள 37 கைதிகள் நேற்றுமுன்தினம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசேட பிரிவு கைதிகளான வெலே சுதா, கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மாற்றும் பாதாள உலகக் குழு குற்றங்களுடன் தொடர்புடைய பிரபல கைதிகளே ...

மேலும்..

தொண்டமானின் மறைவு எமக்கும் பாரிய பேரிழப்பு – நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி கவலை!!!

"அமரர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களுக்கும் எமக்கும் பாரிய இழப்பாகும்." - இவ்வாறு எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ சபையில் நேற்று தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட அமரர் ஆறுமுகம் தொண்டமான் தொடர்பான ...

மேலும்..

சஜித்தின் பேச்சுக்கு எதிராக ராஜபக்ச அரசு போர்க்கொடி – உரையைக் ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு தினேஷ் வலியுறுத்து!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துகள் நாடாளுமன்ற ஹன்சாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும்." - இவ்வாறு ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன சபாநாயகரிடம் நேற்று சபையில் கோரிக்கை விடுத்தார். "நீதிமன்றத்தின் அனுமதியுடன்தான் பிரேமலால் ஜயசேகர ...

மேலும்..

வடக்கு – கிழக்குப் பகுதியில் முதலீடுகளை அதிகரிக்குக – புலம்பெயர்ந்த கனடா தமிழ் முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் மஹிந்த வலியுறுத்து (photo)

புலம்பெயர்ந்த கனடா தமிழ் முதலீட்டாளர்களைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று சந்தித்துள்ளார். வடக்கு - கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் கனடாவில் இருக்கக்கூடிய முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ...

மேலும்..

தனது அரசியலுக்காகத் தமிழ் மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்தும் விக்கி – விளாசுகின்றார் சரத் வீரசேகர!!

"தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் அரசியல் நோக்கங்களுக்காகத் தமிழ் மக்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொள்கின்றார். தமிழ் - முஸ்லிம் மக்களை இணைத்துக்கொண்டு அரசு சிறந்த முறையில் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும்." - இவ்வாறு மாகாண சபைகள் ...

மேலும்..

சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியம் கோட்டா அரசுக்கு எதிராகப் போர்க்கொடி – ’20’ திருத்தத்துக்கும் கடும் எதிர்ப்பு!!!

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முன்னெடுக்கும் ஒரு சில செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன." - இவ்வாறு சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர இன்று தெரிவித்தார். தவறுகளை ராஜபக்ச அரசு உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவர் மேலும் ...

மேலும்..

பிரபாகரனுக்கு நிகர் அவரே! விக்கியை மிரட்டவில்லை; தமிழரை மறக்கவில்லை – பொன்சேகா தெரிவிப்பு!!!

"பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரன்தான். ஆனபடியால்தான் தனிநாட்டை உருவாக்கும் வகையில் விக்னேஸ்வரன் பேசுவதால் அவர் ஒருபோதும் பிரபாகரன் ஆக முடியாது என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தேன். எனது உரையைச் சிலர் தவறாக விளங்கிவிட்டார்கள்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(12/09/2020)

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..