January 17, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பறவைகளை பிடித்து விற்பனை செய்ய முயற்சித்த மூவர் கைது

அநுராதபுரம் – திலோகம வனப்பகுதியில் பறவைகளை பிடித்து விற்பனை செய்ய முயற்சித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளை ரஜ்கம்மன வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கண்டி – அக்குரனை பகுதியைச் சேர்ந்த மூவரே சம்பவம் தொடர்பில் கைது ...

மேலும்..

ஐ.நாவைச் சமாளிக்க அரசு கடும் பிரயத்தனம் – குற்றச்சாட்டுக்களை ஆராய ஆணைக்குழு அமைக்க கோட்டா முடிவு

இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிக்கவும், இலங்கையின் சார்பில் இம்முறை ஜெனிவா அமர்வில் யோசனை ஒன்றை முன்வைக்கவும் மூவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைக்க ...

மேலும்..

ஜே.ஆரின் வழியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் – ஐ.தே.க. தலைவர் ரணில் உறுதி

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியே தீருவோம் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார உட்பட புதிய ...

மேலும்..

நுவரெலியா போராட்டம்! இரண்டு தோட்டங்கள் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பம்..

(க.கிஷாந்தன்) நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தில் நேற்றிரவு (17.01.2021) முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றது. பார்க் தோட்ட முகாமையாளர் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் பேசிய சம்பவத்தை அடுத்தே, இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 7 ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் வெளியிட நடவடிக்கை

இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை ஏப்ரல் மாதத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களை பெறுபேறுகளுக்கமைய செப்டம்பர் மாதமளவில் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் உயர்தர பரீட்சை ...

மேலும்..

வானிலை அறிக்கை

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்குமாகாணத்தில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் பல ...

மேலும்..

திருமண மண்டபங்களில் திருமணங்களை நடத்துவதற்கு வவுனியாவில் தடை!

மறு அறிவித்தல் வரை வவுனியா மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் திருமணங்களை நடத்துவது மற்றும் பொதுச்சந்தைகளை மீள திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். அதேநேரம், மருதனார் மட கொத்தணியில் இருந்து தற்காலிக இடத்திற்கு ...

மேலும்..

சஜித் அணியுடன் இணைந்தோர் மீண்டும் ஐ.தே.கவுடன் சங்கமம்!

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீள இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்ட இரத்தினபுரி மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நேற்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டனர். ஐக்கிய ...

மேலும்..

அலங்காநல்லூர் ‘ஜல்லிக்கட்டு’.. 12 காளைகளை அடக்கி ‘முதல் பரிசை’ தட்டிச்சென்ற கண்ணன் .!

உலக புகழ்பெற்ற பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை அடக்கி கண்ணன் என்பவர் முதல் பரிசை தட்டுச்சென்றார். பொங்கல் பண்டிகையின் 3-வது நாளான இன்று உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.30 மணிக்கு தொடங்கியது. கோட்டை முனியசாமி ...

மேலும்..

இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது -பொது சுகாதார அதிகாரிகள் சங்கம்

இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக பரவிக்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் நாட்டினை திறக்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்லவெனவும் அந்த  சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் நிலைமைகள் ...

மேலும்..

மட்டக்களப்பு- வாகரையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் 10 போத்தல் கசிப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலையில் கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான இன்று காலை கதிரவெளியிலுள்ள ...

மேலும்..

மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

களுத்துறை பொலிஸ் பிரிவில் சில பிரதேசங்களும் பேருவளை பொலிஸ் பிரிவில் ஒரு பிரதேசமும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை பின்வருமாறு:

மேலும்..

மகளை தாக்கிய குற்ற உணர்வினால் தந்தையார் தற்கொலை- திருக்கோவிலில் சம்பவம்

கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையின்போது குறுக்கே சென்ற மகள் மீது தந்தையர் தாக்கியதையடுத்து அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தையார் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று திருக்கோவிலில் இடம்பெற்றுள்ளது. இன்று (17 ) மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திருக்கோவில் 2ம் ...

மேலும்..

சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் !

சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு சீனாவில் டியன்ஜின் டகியஓடஓ உணவு நிறுவனம் (Tianjin Daqiaodao Food Company) செயல்பட்டு வருகிறது. இங்கு நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து பால் பவுடர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ...

மேலும்..

கிளிநொச்சியில் 07வது நாளாகவும் இருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ..

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின்அங்கத்தவர்கள் இருவர் முன்னெடுத்து வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இயங்கு நிலையில் இருந்த நிர்வாகத்தினை  இடைநிறுத்தி 05 பேர் கொன்ட , புதிய இயக்குனர் ...

மேலும்..

(வீடியோ)ஐக்கிய நாடுகள் சபைக்கு எமது பிரச்சினையை கொண்டு செல்ல தேவையில்லை-பொஹவந்தலாவ இராகுல தேரர்

https://youtu.be/55OYdr2helM     (பாறுக் ஷிஹான்) ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என்று இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்படவே வேண்டாம். இந்நிலை தொடர போவதில்லை. கொடிய கொரோனா விஷ கிருமி முடிவுக்கு வந்த பிறகு ஜனாஸாவை உங்கள் மார்க்கப்படியே இந்த மண்ணில் புதைக்கலாம். மனிதன் இயற்கைக்கு செய்த தவறினால் இயற்கை ...

மேலும்..

வவுனியாவில் மேலும் 24 கொரோனா தொற்றாளர்கள்!

வவுனியாவில் 24 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு  பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியது. அதனடிப்படையில் வவுனியாவின் நகரப்பகுதிகளில் ...

மேலும்..

யாழில் எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்தநாளை எழுச்சியாக கொண்டாடிய யாழ் எம்.ஜி.ஆர்!!

(தங்கராசா ஷாமிலன்) தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றுநான்காவது பிறந்த தினம்  இன்று (17-01-2021)  ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 க்கு  யாழ்ப்பாணம்  கல்வியங்காடு  செங்குந்தா பொதுச்சந்தை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு  மாலை அணிவித்தும் தீப ஆராதனை காட்டப்பட்டும் மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது. யாழ் ...

மேலும்..

கல்முனை கலாசார மத்திய நிலையத்தின் 2021ஆம் ஆண்டுக்கான திறன் அபிவிருத்திப் பாடநெறிக்கான விண்ணப்பம் கோரல்!

(றாசிக் நபாயிஸ்) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் பூரண அனுசரணையில் கல்முனை கலாசார மத்திய நிலையத்தினால் நடாத்தப்படவிருக்கும் 2021ஆம் ஆண்டுக்கான திறன் அபிவிருத்தி பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் உரிய தகைமைகள் உள்ளவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளது. இதில் பாடசாலையில் கல்வி பயில்வோர், பாடசாலையை விட்டும் வெளியேறியவர்கள், அரச அலுவலகங்களில் சேவையாற்றுவோர் ...

மேலும்..

மாளிகைக்காட்டில் சுயதனிமைப்படுத்தல் இல்லை : வர்த்தகர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வியாபாரத்தில் ஈடுபடலாம்-பஸ்மீர்

(நூருல் ஹுதா உமர்) காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு வர்த்தகர்கள்  வழமை போல் கோவிட் -19 சட்ட விதிமுறைகளுக்கு அமைய தங்களது வியாபாரங்களை செய்யலாம். அதில் எவ்வித தயக்கங்களுமிருக்க தேவையில்லை. சாய்ந்தமருது கொரோனா செயலணி எடுத்த தீர்மானத்தை மாளிகைக்காடு மக்கள் கடைபிடிக்கவேண்டிய அவசியமில்லை ...

மேலும்..

ஆட்சியைக் கைப்பற்றும் இலக்குடன் நாம் உறுதியுடன் பயணிக்கின்றோம் – சஜித் பிரேமதாஸ

நாம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருந்தால் நிச்சயம் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கையை முன்னெடுத்திருப்போம். துரதிஷ்டவசமாக நாம் இரண்டு பிரதான தேர்தல்களிலும் வெற்றியடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் இலக்குடன் நாம் உறுதியுடன் பயணிக்கின்றோம்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய ...

மேலும்..

யாழில் ‘தூய கரம் தூய நகரம்’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு

யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணனால் “தூய கரம் தூய நகரம்” என்ற தொனிப்பொருளில் யாழ் நகரத்தை தூய்மைபடுத்தும் செயற்பாடு இன்று (17)இடம்பெற்றது. தூய்மைப்படுத்தும் வேலை  திட்டத்தில் யாழ் மாநகரசபை ஆணையாளர், யாழ் மாநகர சபை சுகாதார ஊழியர்கள், சமுக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், ...

மேலும்..

ஆயிரம் ரூபாய் வேண்டும்! – ஹட்டனில் போராட்டம்!

(க.கிஷாந்தன்) பெருந்தோட்ட தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் முன்னெடுத்து வரும் நாளாந்த அடிப்படை சம்பளம் மற்றும் மாதத்தில் 25 நாள் வேலை கோரிக்கைக்கான தொடர் போராட்டத்தில் மலையகத்தில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புகள் இன்று (17.01.2021) ஹட்டன் மல்லியப்பு சந்தியில் நடைபெற்ற போராட்டத்தில் ...

மேலும்..

ராஜகிாிய பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவில் இருவர் உயிரிழப்பு

ராஜகிரிய – கலபலுவாவ – அக்கொன வீதியில் கட்டடமொன்றின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திற்கு அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி ,நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்த இருவரே இன்று (17) காலை இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ,இதில் ...

மேலும்..

தடைகளை வென்று இந்திய ரக்பி அணியில் இடம் பிடித்த சுமித்ரா!

அது 2008ஆம் ஆண்டு. எட்டு வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி ஒடிஷாவில் ஒரு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் ஒரு முட்டை வடிவ பந்தை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பதை கண்டார். முதலில் அவர் அது டைனோசர் முட்டைபோல உள்ளது என நினைத்தார். முதன் ...

மேலும்..

வெளிநாடு சென்றிருந்த 288 இலங்கையர்கள்நாடு திரும்பினர்

வெளிநாடு சென்றிருந்த 288 இலங்கையர்கள் இன்று(17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். தொழில் நிமித்தம் சென்று, பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியிருந்த நிலையில், நாடு திரும்ப முடியால் இருந்த இலங்கையர்களே டுபாயில் இருந்து இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளனர். நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் இலவசமாக பிசிஆர் பரிசோதனை ...

மேலும்..

சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார் மைத்திரி

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் மீதான துன்புறுத்தல்கள் உடன் முடிவுக்கு வர வேண்டும். நினைவேந்தல் உரிமையை வேண்டுமென்றே தட்டிப் பறிப்பதும், இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி மறுப்பதும் அடக்குமுறையின் உச்சக்கட்டத்தையே எடுத்துக்காட்டுகின்றது." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபை எல்லைகளில் அத்துமீறும் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது : காரைதீவு தவிசாளர் ஜெயசிறில்

(நூருல் ஹுதா உமர்) மக்களுக்கு தீங்கு விளைவிக்காத எவ்வகையான நடவடிக்கைகளுக்கும் பிரதேச எல்லைகள் கடந்து ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க எந்நேரமும் நாங்கள் தயாராக உள்ளோம். அதற்காக எங்களின் பிரதேசங்களில் வந்து அத்துமீறும் காரியங்களை செய்ய யாருக்கும் அனுமதியளிக்க முடியாது. எல்லா வகையான செயற்பாடுகளுக்கும் ...

மேலும்..