January 29, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் கொவிட்சீல்ட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று முதல்!

கொரோனா தடுப்பு கொவிட்சீல்ட் தடுப்பூசி நாட்டின் ஏனைய மாவட்டங்களில் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. அந்த வேலைத்திட்டம் நேற்று மேல் மாகாணத்தில் பிரதான 9 வைத்தியசாலைகளில் ஆரம்பமானது. இதன்போது 5,286 பேருக்கு தடுப்பூசில் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு ...

மேலும்..

கல்முனைப் பிராந்திய சுகாதார பிரிவுக்கு 4870 கொரோனா தடுப்பூசி !

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு 4870 கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். இத் தடுப்பூசிகள் இன்று (30) வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   இத் தடுப்பூசிகள் பிரதான வைத்தியசாலைகளில் ...

மேலும்..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (30) இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தொிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலும் பொலனறுவை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அநேக இடங்களில் 75 மில்லி ...

மேலும்..

கனடாவில் சர்வதேச புத்தாக்க போட்டியில் இலங்கையின் சகீ லதீப் உயர் விருதான முதல் 10 சிறந்த புத்தாக்க விருதுடன் தங்க பதக்கம் மற்றும் விஷேட விருது வென்று சாதனை

International Invention & Innovation Competition In Canada - 2020 இல் குருநாகல் இப்பாகமுவ பிரதேசத்தை சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் எம். டீ. எம். சகீ லதீப் இன் Arogya Herbal (சர்ம நோய்களுக்கு சிகிற்சை) Paste to Treat ...

மேலும்..

இலங்கை இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் சவாலை எதிர்கொள்ளப் போகின்றது..

இலங்கை இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் சவாலை எதிர்கொள்ளப் போகின்றது என்பது ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது. அரசு குறித்த அறிக்கையை ஆழமாக ஆராய்ந்து, உரியவாறான பிரதிபலிப்பை எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரில் வெளிப்படுத்த வேண்டும்." - ...

மேலும்..

முதல் நாளில் 5,286 பேருக்கு கொரோனாத் தடுப்பூசிகள்!

இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனேகா கொரோனாத் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் நேற்று ஆரம்பமானது. முதலாம் நாளான நேற்று 2 ஆயிரத்து 280 சுகாதார ஊழியர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டது எனச் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் ...

மேலும்..

குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டது முற்றிலும் உண்மை; போலீசாருக்கு கள நிலையை நேரடியாக காண்பித்தார் – ரவிகரன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் உண்மையானது என்ற விடயத்தினை, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள்  போலீசாருக்கு நேரடியாக உறுதிப்படுத்தியுள்ளார். குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் ...

மேலும்..

காணமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட அவர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஊடக அமைப்புக்கள் இணைந்து நடாத்திய இவ் ஆர்ப்பாட்டமானது மட்டக்களப்பு காந்திபூங்கா முன் காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. உழைக்கும் ஊடக தொழிற்சங்க சம்மேளனம், கிழக்குமாகாண ...

மேலும்..

வயல் அறுவடை ஆரம்பம் – விளைச்சல் குறைவால் வாழைச்சேனை விவசாயிகள் கவலை!

வாழைச்சேனை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட விவசாய நிலங்களில் தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வரும் நிலையில் விளைச்சல் குறைவாக காணப்படுவதுடன், வெள்ளத்தில் பாதிப்படைந்ததால் நெற்களில் கருப்பு நிறம் காணப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் விவசாயம் செய்யப்பட்ட பதினையாயிரம் ...

மேலும்..

வடக்கிற்கு 11,080 தடுப்பூசிகள் கிடைத்தன: தடுப்பூசித் திட்டம் நாளை ஆரம்பம்!

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்குவதற்காக 11 ஆயிரத்து 80 கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் கிடைத்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் இன்று (29) குறிப்பிடுகையில், “வடக்கு மாகாணத்தில் ...

மேலும்..

இந்த ஆட்சியில் மலையகத்தில் ஒரு செங்கலை கூட வைக்கவில்லை-மனோ கணேசன்

இலங்கை, இந்திய அரசுகளின் உதவிகளை போராடி, கேட்டு, ஒப்பந்தம் செய்து, பெற்று, மலைநாட்டு தோட்டங்களில் தனி வீடுகள் கட்டி, அந்த வீட்டு குடியிருப்புகளை மலையகத்தில் தமிழ் பெயர்களில் புதிய மலையக தமிழ் கிராமங்களாக  அடையாளப்படுத்தும் மலையக வரலாற்றின் எழுச்சி  பயணத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி நான்கே வருடங்களில் படிபடியாக ஆரம்பித்து ...

மேலும்..

ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்பே – தவராசா கலையரசன்.

பாதுகாப்புச் செயலாளராக இருந்து யுத்தத்தை வழி நடத்திய ஜனாதிபதியால்  ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பது  வெறும் கண்துடைப்பாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். நிந்தவூர் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவியை ...

மேலும்..

நாட்டில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இன்றைய தினம் மேல் மாகாணத்தில் மாத்திரம் 2,280க்கும் அதிகமான முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா (Oxford Astra - Zeneca) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவினால் இந்நாட்டுக்கு வழங்கப்பட்ட ...

மேலும்..

மட்டக்களப்பு-ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயிலில் பெப்ரவரி 1ம் திகதி கும்பாபிஷேகம்..

தசாப்தங்கள் கடந்து ஆன்மீகப் பணி, கல்விப் பணி, சமுதாய மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் வகிபங்கு மகத்தானது. சமகாலத்தில் மக்களிடையே புரையோடிப்போயிருக்கின்ற பிரச்சினைகளுக்கு ஆன்மீகமும் பக்தி மார்க்கமும்தான் சிறந்த உபாயங்களாகின்றன. மாறிவரும் உலகின் இக்கட்டான காலகட்டங்களிலெல்லாம் சமுதாயத்தின் தேவையறிந்து ...

மேலும்..

வடக்கு- கிழக்குக்கு ஆளுமையான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்- லோகநாதன்

வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு ஆளுமை, திறமை மிக்க புதிய ஆளுநர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்க வேண்டுமென அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்துள்ளார். காரைதீவில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

வாழைச்சேனை-நாசிவந்தீவு மணல் அகழ்வு திட்டம் நிறுத்தல் -வியாளேந்திரன் அதிரடி

வாழைச்சேனை நாசிவன்தீவு கிராமத்தில் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராட்சி திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற எந்தவொரு செயற்றிட்டத்தினையும் அரசாங்கம் செயற்படுத்துவது இல்லை என்றும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் நாசிவன்தீவு கிராமத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட ...

மேலும்..

மனைவியை குத்திக் கொன்றுவிட்டு கணவன் பொலிசில் சரண்!

அட்டன்,  கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ - மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.   28 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான மாலிகா பிரியதர்ஷினி என்பவரே, அவரின் கணவரால் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.   குறித்த ...

மேலும்..

கிளிநொச்சி நகரில் இராணுவத்திற்கு காணியை பாரதீனப்படுத்த முயற்சி எதிர்ப்பினை வெளியிட்டார் சிறீதரன் எம்.பி

கிளிநொச்சி நகரில் உள்ள நூலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள இராணுவத்தினரால் கையகப்படுத்தியுள்ள காணிகளை தமக்கு பாரதீனப்படுத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடுமையான எதிர்ப்பினை ...

மேலும்..