கிளிநொச்சி நகரில் இராணுவத்திற்கு காணியை பாரதீனப்படுத்த முயற்சி எதிர்ப்பினை வெளியிட்டார் சிறீதரன் எம்.பி

கிளிநொச்சி நகரில் உள்ள நூலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள இராணுவத்தினரால் கையகப்படுத்தியுள்ள காணிகளை தமக்கு பாரதீனப்படுத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடுமையான எதிர்ப்பினை இன்று வெளிப்படுத்தினார்.

அரச திணைக்களங்கள் ஒவ்வொன்றும் தமக்கு பாராதீனப்படுத்த வேண்டிய காணிகள் தொடர்பில் பரிசீலித்தவேளையிலேயே இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களினால் கடுமையான எதிர்ப்பபை வெளியிட்டிருந்தார்
எந்த நகரத்திலும் இல்லாதவாறு ஏற்கனவே கிளிநொச்சியில் பல காணிகளை இராணுவம் சுவீகரத்து வைத்திருக்கிறது. மாவட்ட செயலகத்துக்குள்ளேயே இராணுவம் காணியின் ஒரு பகுதியை இராணுவம் சுவீகரித்து வைத்திருக்கிறது. இவ்வாறு நகருக்குள் பேயே பல ஏக்கர் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்திருக்கிறார்கள். எனவே இந்த தீர்மானத்தை நிறைவேற்றவேண்டாம் என விடாப்பிடியாக இருந்ததை தொடர்ந்து இராணுவத்திற்கு பாராதீனப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றாமல் கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.