May 2, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கோத்தா கோகமவில் 24 மணி நேரம் இயங்கும் மின் உற்பத்தி நிலையம்

காலி முகத்திடல் போராட்ட களத்துக்கு 24 மணிநேர நடமாடும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லொறியில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் நிலையத்தின் திறன் 6 கிலோ வாட் எனக் காட்டப்பட்டுள்ளது. குறித்த நடமாடும் சூரிய சக்தி நிலைய வாகனம் பல நாட்களாக ...

மேலும்..

சுயேச்சை எம்.பி.க்கள் கருத்தியல் ரீதியாக தேசிய ஒருமித்த அரசாங்கத்திற்கு உடன்படுகின்றனர்!

விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சுயேட்சை எம்.பி.க்கள் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது தேசிய ஒருமித்த அரசாங்கத்தை அமைப்பதற்கான கருத்தியல் உடன்படிக்கைக்கு வந்துள்ளனர். தேசிய ஒருமித்த அரசாங்கமொன்றை அமைப்பதற்கு பல தரப்பினரும் ஜனாதிபதியிடம் முன்வைத்த யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற ...

மேலும்..

எரிபொருளுக்காக இந்தியாவுடனான கடன் திட்டம் 200 மில்லியன் டொலராக நீடிப்பு!

அரசாங்கம் அவசரகால எரிபொருள் இருப்புக்களை கொள்வனவு செய்வதற்காக 200 மில்லியன் டொலர் கடனுதவியை இந்தியாவுடன் நீடித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார். மேலும் 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தை நீடிப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ...

மேலும்..

மீண்டும் நாட்டின் பல பகுதிகளில் பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. .

மீண்டும் நாட்டின் பல பகுதிகளில் பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. குறிப்பாக மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதாகத் தெரிய வருகிறது. எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு ...

மேலும்..

நீர் கட்டணப் பட்டியல் அச்சிடுவது நிறுத்தப்படுகிறது;இனிமேல் இ-பில் அல்லது குறுஞ்செய்தி – நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

இனிவரும் காலங்களில் இ-பில் அல்லது குறுஞ்செய்தி மூலம் குடிநீர் கட்டணங்கள் வழங்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. தாள் தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கட்டணம் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அச் சபையின் பேச்சாளர் தெரிவித்தார். அதன்படி, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்கள் இ-பில்லிங் அல்லது எஸ்எம்எஸ் ...

மேலும்..

மஹிந்தவுக்கு இந்தப் பிரதமர் பதவி பெரிய விடயமல்ல: டிலான் பெரேரா

மொட்டில் புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் அமைப்பதே குறுகிய காலத்தில் நாட்டின் பிரச்சினைக்கு மிகவும் நடைமுறையான தீர்வாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் டலஸ் அழகப்பெரும ...

மேலும்..

ரமழானின் பலாபலன்கள் நாட்டு மக்களை நெருக்கடியில் இருந்து மீட்கட்டும்.

ரமழான் மூலம் கிடைக்கும் உயர் பலாபலன்கள் நாட்டு மக்கள் சகல நெருக்கடிகளில் இருந்தும் விடுபட வழிசமைக்கட்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.ரமழான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.மேலும் அவர் தனது ...

மேலும்..

எஞ்சின் ஒயில் விலையும் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வாகனங்களுக்கு பயன்படுத்தப் படும் எஞ்சின் ஒயில் விலைகள் அதிகரிக்கப் பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதன்படி 20 முதல் 50 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. எனினும், சில எஞ்சின் ஒயில் வகைகளின் ...

மேலும்..

கல்முனை ஸக்காத் நிதியத்தின் உப பொருளாளர் ஹாரூன் மறைவுக்கு முதல்வர் ஏ.எம்.றகீப் அனுதாபம்….

கல்முனை பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் உப பொருளாளரும் பிரபல பெற்றரி கடை உரிமையாளருமான நண்பர் முஹம்மட் ஹாரூன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தியறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த துக்கமும் அடைந்துள்ளேன் என்று கல்முனை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் ...

மேலும்..

கிழக்குப்பல்கலைக்கழக, சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற மாணவர் ஆர்ப்பாட்டம் தொடர்பான ஊடக அறிக்கை!!

கிழக்குப் பல்கலைக் கழக, சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 29.04.2022 அன்று நடந்த மாணவர் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாணவர்களால் வழங்கப்பட்டு பரவலாக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள செய்தியானது உண்மைக்குப் புறம்பானதும் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுமாக அமைகின்றது. எனவே மக்களுக்கு உண்மை ...

மேலும்..

கதீப் முஅத்தின் மார்களுக்கான பொதி வழங்கி வைப்பு

- யூ.கே.காலித்தீன்- ஸீறா பவுன்டேசன் ஸ்ரீ லங்கா அமைப்பினால் வருடா வருடம்    அமைப்பின் சர்வதேச  மற்றும் உள்ளுர் நல்லுள்ளங்களின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் நிகழ்வானது தொடர்ந்தேச்சியாக பத்தாண்டுகடந்து இம்முறையும் தனது சேவைகளை செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் கொவிட்19 தாக்கத்தினதும்,  அசுர வேகத்தில் நாளுக்கு ...

மேலும்..

 இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மாவட்ட மட்டத்தில் மீளாய்வு செய்யப்படுகிறது

செய்தி ஆசிரியர்  ஐயா .  நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வீதி மற்றும் பாலங்கள் அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் மாவட்ட மட்டத்தில் அதன் முன்னேற்றம் ஆகியவை நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் மீளாய்வு செய்யப்பட்டது.  இதன் கீழ், மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் கேகாலை ஆகிய ...

மேலும்..

மரணித்தவரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் மட்டக்களப்பு தலைமையக பொலிசார்!!

மட்டக்களப்பு பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் கடந்த 26.04.2022 ஆந் திகதி காலை 7.30 மணியளவில் 60 தொடக்கம் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலைத் தொடர்ந்து, அங்கிருந்த பஸ் நடத்துனரினால் 1990 அவசர சேவை நோயாளர் ...

மேலும்..

வளப் பற்றாக்குறையால் 5வருடங்களாக இயங்காமல் இருக்கும் தொலைக்கல்வி மத்திய நிலையம்.

சாவகச்சேரி நிருபர் தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையம் கணணிகள் வழங்கப்படாமையால் 5வருட காலமாக இயங்காமல் காணப்படுவதாக தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன் சுட்டிக்காட்டியிருந்தார். கடந்த புதன்கிழமை குறித்த நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்; எமது வலயக்கல்வி அலுவலகத்தின் ...

மேலும்..

புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் தென்மராட்சி கல்வி வலயம் முதலாவது தமிழ் வலயமாக உள்ளது-வலயக்கல்விப் பணிப்பாளர்

சாவகச்சேரி நிருபர் அண்மையில் வெளியான புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தென்மராட்சிக் கல்வி வலயம் இலங்கையின் முதலாவது தமிழ் வலயமாகக் காணப்படுவதாக தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.அண்மையில் வலயக்கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இலங்கையில் ...

மேலும்..

விவாதத்திற்கு அழைத்த அமைச்சர் நஸீரை கிண்டல் செய்தார் ஹக்கீம் எம்.பி : விவாத அழைப்புக்கு மௌனம் காக்கிறார் !

நூருல் ஹுதா உமர் முழு சமூகத்தின் அவமான சின்னமாக ஒருவர் மாறியுள்ளார் என்கின்ற வேதனை தான் எங்களுக்கு உள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஏறாவூரில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் ...

மேலும்..

ஜனநாயகம் தழைத்தோங்கி ஏழ்மைநிலை இல்லாதொழிய நோன்புப்பெருநாள் தினத்தில் முஸ்லிங்கள் பிராத்தியுங்கள் : அல்- மீஸான் பௌண்டஷன்

மாளிகைக்காடு நிருபர் நாடு கஷ்டத்தில் சிக்கி நாமெல்லாம் நடுவீதியில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இஸ்லாம் கூறும் சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவம், பரஸ்பரத்தை பேணி எல்லா இலங்கையர்களும் உறுதியான மன நிம்மதியுடனும், விட்டுக்கொடுக்க முடியா சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து நிறைவான செல்வங்கள் ஓங்கி தன்னிறைவு ...

மேலும்..