June 9, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழா 3ம் நாள் பூசை நிகழ்வுகளும் ஊற்சுற்று காவியம் பாடுதலும் …..

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழா 3ம் நாள் பூசை நிகழ்வுகளும் ஊற்சுற்று காவியம் பாடுதலும் இது தொடர்பான படங்கள் இணைப்பு ..... ...

மேலும்..

கல்முனை   ஸ்ரீ கடற்கரை கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு

வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை   ஸ்ரீ கடற்கரை கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு 6 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமானது அதனையொட்டி  வீதி மற்றும் ஆலய சூழல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த சடங்கு இந்த தடவை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருக்குளிர்த்தி சடங்கு 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடைய ...

மேலும்..

வாகன வாடகை மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

கிளிநொச்சி பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து வந்து திருப்பிக் கொடுக்காத பல சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 27, 29 மற்றும் 37 வயதுடைய பிலிமத்தலாவ மற்றும் தந்துரே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். சந்தேகநபர்கள் மூவருடன் ஐந்து கார்கள், இரண்டு வேன்கள் மற்றும் ஜீப் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேகாலை விசேட குற்றத்தடுப்புப் ...

மேலும்..

அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு அறிவிப்பு!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே அரிசி கையிருப்பு உள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்காரணமாக அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் 3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக விவசாய பணிப்பாளர் ...

மேலும்..

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷா இல்லை!

நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷா இல்லை என சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சொய்சா தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் முதல் திரிபோஷாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சோள விளைச்சல் இல்லாமையே திரிபோஷா உற்பத்தி தடைப்படுவதற்கு முக்கிய காரணமாகும். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் ...

மேலும்..

மஹிந்த உட்பட பல அரசியல்வாதிகள் இதுவரையில் கடவுச்சீட்டை ஒப்படைக்கவில்லை – சட்டமா அதிபர்

நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் அறிவித்தார். அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பிலான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் ஆஜரான ...

மேலும்..

முறையற்ற விதத்தில் பஸ் கட்டணம் அறவிடப்படுமானால் உடனடியாக அழையுங்கள்!

நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பஸ் நடத்துநர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ தெரிவித்துள்ளார். முறையற்ற விதத்தில் பஸ் கட்டணம் அறவிடப்படுமானால் உடனடியாக 1955 என்ற எண்ணுக்கு அழைக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். பஸ் கட்டண திருத்தத்திற்கு பின்னர் அதிக கட்டணம் வசூலிப்படுவதாக பல புகார்கள் வந்துள்ளதாகவும், ...

மேலும்..

கதிர்காம பாதயாத்திரை சென்றவர்களுக்கு இராணுவம் சிற்றுண்டி வழங்கி வைத்தது

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு 06/06 திங்கட்கிழமை இராணுவத்தினர் சிற்றுண்டி வழங்கி வைத்திருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த குறித்த பாத யாத்திரை திங்கட்கிழமை பிற்பகல் தென்மராட்சி-மிருசுவில் பகுதியை வந்தடைந்த போது 52வது படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு தேநீர்,சிற்றுண்டி ஆகியன வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

சாய்ந்தமருதில் தமிழ் நாட்டின் நிவாரணப் பொதிகள் விநியோகம்…

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட உணவு நிவாரணப் பொதிகள் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் நேற்று புதன்கிழமை (08) ஒரு தொகை பயனாளிகளுக்கு இந்நிவாரணப் பொதிகள் வழங்கி ...

மேலும்..

அறுபத்தொன்பது இலட்சம் மக்களின் வாக்கு கிடைத்த இறுமாப்பில் எடுத்த முடிவுகளால் இன்று மக்களே அல்லற்படுகின்றனர்… (பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம் ஜனா)….

தனக்கு அறுபத்தொன்பது இலட்சம் மக்களின் வாக்கு கிடைத்தது என்ற இறுமாப்பில் எடுத்த சேதன விவசாயக் கொள்கையே நம் நாட்டு மக்களின் முக்கிய தொழில் துறையான விவசாயம் அதள பாதாளத்துக்குள் வீழ்ந்ததன் ஒரே காரணமாகும். எந்தவிதமான ஆராய்தலுமின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவால் இன்று ...

மேலும்..

ஐந்து நீர் மின் நிலையங்கள் செயலிழப்பு…

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நீர்மின் உற்பத்தி சிலவற்றின் தொழிற்பாடுகள் செயலிழந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர மற்றும் கெனியோன் ஆகிய 5 நீர்மின் நிலையங்களின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன. இதன்காரணமாக ...

மேலும்..

காட்டு யானை தாக்கியதில் 6 மாத குழந்தை பலி….

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளக்காட்டு பகுதியில் காட்டு யானைத் தாக்கியதில் 4 மாத குழந்தையொன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை குறித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றின் கீழ் குழந்தையை உறங்க வைத்துவிட்டு குழந்தையின் பெற்றோர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ...

மேலும்..

8,000 ஆசிரியர்களுக்கு வெற்றிடம்; கல்வி அமைச்சு

நாடளாவிய ரீதியிலுள்ள மாகாண பாடசாலைகளில் 8,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன் 22, 000 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அரசாங்கத்திற்கு இணைத்து கொள்ளப்பட்ட ...

மேலும்..