சாய்ந்தமருதில் தமிழ் நாட்டின் நிவாரணப் பொதிகள் விநியோகம்…

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட உணவு நிவாரணப் பொதிகள் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் நேற்று புதன்கிழமை (08) ஒரு தொகை பயனாளிகளுக்கு இந்நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.எம்.நஜீம் உட்பட கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் நாளாந்த வருமானத்தை இழந்துள்ள குடும்பத்தினருக்கும் கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் அரிசி, பால்மா போன்றவை வழங்கப்பட்டிருக்கின்றன.

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இந்நிவாரண உதவியைப் பெறுவதற்கு 1760 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.