கல்முனை   ஸ்ரீ கடற்கரை கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு

வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை   ஸ்ரீ கடற்கரை கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு 6 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமானது

அதனையொட்டி  வீதி மற்றும் ஆலய சூழல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த சடங்கு இந்த தடவை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருக்குளிர்த்தி சடங்கு 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடைய இருக்கிறது .கடந்த இரண்டு வருடம் கொரோனா காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திருக்குளிர்த்தி இடம் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 09/06/2022 கல்முனை அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நற்சிந்தனை ,பஜனை நிகழ்வுகள் ,அதனைத் தொடர்ந்து பூசை நிகழ்வு இடம்பெற்றதுடன் பெரும் திரளான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.