வாகன வாடகை மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

கிளிநொச்சி பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து வந்து திருப்பிக் கொடுக்காத பல சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்கள் 27, 29 மற்றும் 37 வயதுடைய பிலிமத்தலாவ மற்றும் தந்துரே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்கள் மூவருடன் ஐந்து கார்கள், இரண்டு வேன்கள் மற்றும் ஜீப் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கேகாலை விசேட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மத்துகம விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட ஏழு சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் இன்று (09) மாவனல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கேகாலை விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்