8,000 ஆசிரியர்களுக்கு வெற்றிடம்; கல்வி அமைச்சு

நாடளாவிய ரீதியிலுள்ள மாகாண பாடசாலைகளில் 8,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன் 22, 000 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அரசாங்கத்திற்கு இணைத்து கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்