அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு அறிவிப்பு!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே அரிசி கையிருப்பு உள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் 3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக விவசாய பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நுகர்விற்கு தேவையான அரிசியின் அளவு மாதாந்தம் 2 இலட்சம் மெட்ரிக் தொன் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.