மாடுகளுக்கு பரவும் புதிய தொற்று நோய்!

இலங்கையில் இதுவரை பதிவாகாத மாடுகளுக்கு இடையில் பரவும் தொற்று நோய், தற்போது மாடுகளுக்கு இடையில் வேகமாக பரவி வருவதாக மிருக வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவிக்கின்றது.

இந்த தொற்று காரணமாக மிருக பண்ணைகளின் மிருக வளர்ப்பு, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெஃப்ரி பொன்ஸ் என்ற வைரஸ் ஒன்றே இவ்வாறு பரவி வருகின்றது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தொற்று ஏற்படும் மாடுகளின் உடலில் தழும்புகள் ஏற்படுதல், காய்ச்சல் ஏற்படுதல், உணவுகளை தவிர்த்தல் உள்ளிட்ட மேலும் சில அறிகுறிகள் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியுள்ள போதிலும், இதனால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது என கூறப்படுகின்றது.

இந்த தொற்றுக்குள்ளாகியுள்ள பசுக்களிடமிருந்து பால் சுரப்பது வெகுவாக குறைவடையும் அதேவேளை, பசுக்கள் கர்ப்பம் தரித்தலும் குறைவடையும் என கூறப்படுகின்றது.

இந்த நோய் தாக்கத்திலிருந்து மாடுகளை பாதுகாத்துக்கொள்வதற்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்து தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மாடுகளுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், அது தொடர்பில் அரச மிருக வைத்தியருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.